PIB Headquarters
2025 அக்டோபர் மாதத்தில் சரக்கு மற்றும் சேவை வரியாக ரூ.1,95,936 கோடி கிடைத்துள்ளது
தமிழ்நாட்டில் இருந்து ரூ.11,588 கோடி பெறப்பட்டுள்ளது
प्रविष्टि तिथि:
03 NOV 2025 3:30PM by PIB Chennai
2025 அக்டோபர் மாதத்தில் சரக்கு மற்றும் சேவை வரியாக (ஜி.எஸ்.டி.) ரூ.1,95,936 கோடி கிடைத்துள்ளது. இது 2024 அக்டோபர் மாதத்தில் இருந்து 2025 அக்டோபர் மாதம் வரையிலான காலகட்டத்தில் 4.6 சதவீதம் அளவிற்கு அதிக வரி பெறப்பட்டுள்ளது. மொத்த உள்நாட்டு சரக்கு மற்றும் சேவை வரி வருவாய் 2024 அக்டோபர் மாதத்தில் ரூ.1.42.251 கோடியாக இருந்த நிலையில், 2 சதவீதம் அதிகரித்து 2025 அக்டோபர் மாதத்தில் ரூ.1.45.052 கோடியாக இருந்தது.
மத்திய சரக்கு மற்றும் சேவை வரியாக ரூ.36,547 கோடியும், மாநில சரக்கு மற்றும் சேவை வரியாக ரூ.45,134 கோடியும், ஒருங்கிணைந்த சரக்கு மற்றும் சேவை வரியாக ரூ.1,06,443 கோடியும், செஸ் வரியாக ரூ.7,812 கோடியும் பெறப்பட்டுள்ளது.
மொத்த சரக்கு மற்றும் சேவை வரி வருவாயில், மகாராஷ்டிரா, கர்நாடகா, குஜராத், தமிழ்நாடு மற்றும் ஹரியானா மாநிலங்கள் 40 சதவீதத்திற்கும் மேலான பங்களிப்பை அளித்துள்ளன. தமிழ்நாட்டில் இருந்து 2024 அக்டோபர் மாதத்தில் ரூ.11,188 கோடியும் 2025 அக்டோபர் மாதத்தில் ரூ.11,588 கோடியும் சரக்கு மற்றும் சேவை வரியாக கிடைத்துள்ளது. இது முந்தைய ஆண்டைவிட 4 சதவீதம் அதிகமாகும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2185839
***
AD/IR/LDN/SH
(रिलीज़ आईडी: 2185990)
आगंतुक पटल : 33