நிதி அமைச்சகம்
பொதுநிறுவனங்கள் துறை சிறப்பு இயக்கம் 5.O நடவடிக்கைகளை வெற்றிகரமாக நிறைவு செய்தது
प्रविष्टि तिथि:
03 NOV 2025 2:58PM by PIB Chennai
மத்திய நிதியமைச்சகத்தின் பொதுநிறுவனங்கள் துறை சிறப்பு இயக்கம் 5.O நடவடிக்கைகளை வெற்றிகரமாக நிறைவு செய்தது. கண்டறியப்பட்ட அனைத்து நிலுவைப் பணிகளுக்கும் தீர்வு காணப்பட்டது. சி.ஜி.ஓ. வளாகத்தில் ஒரு இடம் கண்டறியப்பட்டு அழகுபடுத்தப்பட்டது. மொத்தம் 550 கோப்புகள் ஆய்வு செய்யப்பட்டு களையப்பட்டது.
2025 அக்டோபர் 24 அன்று பொது நிறுவனங்கள் துறை செயலாளர் ஆய்வு உள்ளிட்ட 4 சமூக ஊடகப் பதிவுகள் எக்ஸ் தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டது. 45 செயல்படாத பொருட்கள் கண்டறியப்பட்டு களையப்பட்டது. சி.ஜி.ஓ. வளாகத்தில், தரைத்தளம், மூன்றாவது மற்றும் நான்காவது தளங்களில் பொது நிறுவனங்கள் துறை செயலாளர் ஆய்வு செய்தார். பொறுப்பு அதிகாரி 2025 அக்டோபர் 24 அன்று ஆவண காப்பக அறையை ஆய்வு செய்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2185831
***
AD/IR/LDN/SH
(रिलीज़ आईडी: 2185970)
आगंतुक पटल : 16