தேர்தல் ஆணையம்
azadi ka amrit mahotsav

தலைமைத் தேர்தல் ஆணையர் திரு ஞானேஷ் குமாருக்கு ஐஐடி கான்பூரின் புகழ்பெற்ற முன்னாள் மாணவர் விருது வழங்கப்பட்டது

प्रविष्टि तिथि: 02 NOV 2025 7:37PM by PIB Chennai

கான்பூரில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகம் (ஐஐடி), தலைமைத் தேர்தல் ஆணையர் திரு ஞானேஷ் குமாருக்கு, புகழ்பெற்ற முன்னாள் மாணவர் விருது (டிஏஏ) வழங்கி கௌரவித்தது.

1989 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட புகழ்பெற்ற முன்னாள் மாணவர் விருது என்பது, கான்பூர் ஐஐடி அதன் முன்னாள் மாணவர்களின் சிறந்த சாதனைகளை அங்கீகரிக்கும் வகையில் வழங்கும் மிக உயர்ந்த விருதாகும். ஒவ்வொரு ஆண்டும், இந்த நிறுவனம் அதன் முன்னாள் மாணவர்களுடன் இணைந்து தனிநபர்களின் சிறந்த சாதனைகள், நிறுவனத்திற்கு சேவை செய்தல் மற்றும் சமூகம் மற்றும் தேசத்தைக் கட்டியெழுப்புவதற்கான சிறந்த பங்களிப்புகளுக்காக அவர்களை கௌரவிக்கிறது.

முந்தைய விருதாளர்களின் பட்டியலில் கல்வி, தொழில்முனைவு, தொழில்முறை மற்றும் தேசத்திற்கான சேவை ஆகிய துறைகளில் புகழ்பெற்ற பெயர்கள் இடம்பெற்றுள்ளன.

தலைமைத் தேர்தல் ஆணையர் திரு  ஞானேஷ் குமார், 1985 ஆம் ஆண்டு கான்பூர் ஐஐடியில் கட்டுமான பொறியியல் துறையில் பி.டெக் பட்டம் பெற்றார், இன்று அதன் 66-வது நிறுவன தினக் கொண்டாட்டத்தின் போது அவருக்கு விருது வழங்கப்பட்டது.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2185586

 

***

AD/RB/RJ


(रिलीज़ आईडी: 2185735) आगंतुक पटल : 23
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Punjabi