குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
சிஎம்எஸ்-03 தகவல் தொடர்பு செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியதற்காக இஸ்ரோ மற்றும் இந்திய கடற்படைக்கு குடியரசு துணைத்தலைவர் திரு சி.பி. ராதாகிருஷ்ணன் வாழ்த்து தெரிவித்துள்ளார்
Posted On:
02 NOV 2025 7:40PM by PIB Chennai
சிஎம்எஸ்-03 தகவல் தொடர்பு செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியதற்காக குடியரசு துணைத்தலைவர் திரு சி.பி. ராதாகிருஷ்ணன், இஸ்ரோ மற்றும் இந்திய கடற்படைக்கு தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டுள்ளார்.
இந்தியாவின் வலிமைமிக்க எல்விஎம்-எம்5 ராக்கெட் மீண்டும் ஒருமுறை விண்ணில் பாய்ந்து, இந்திய கடற்படைக்கு பயனளிக்கும் வகையில், அதிக எடை கொண்ட மற்றும் மேம்பட்ட தகவல் தொடர்பு செயற்கைக்கோளான ஜிசாட்-7ஆர் (சிஎம்எஸ்-03) ஐ புவி சுற்றுவட்டப்பாதையில் (GTO) வெற்றிகரமாக நிலைநிறுத்தியதைக் குறிப்பிட்டு, குடியரசு துணைத் தலைவர் இந்த சாதனையைப் பாராட்டினார்.
உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட இந்த செயற்கைக்கோள், இந்தியப் பெருங்கடல் பிராந்தியம் முழுவதும் விண்வெளி அடிப்படையிலான தகவல் தொடர்பு, இணைப்பு மற்றும் கடல்சார் கள விழிப்புணர்வை கணிசமாக வலுப்படுத்தும் என்றும், இது தற்சார்பு இந்தியாவை அடைவதில் மற்றொரு பெருமைமிக்க மைல்கல்லைக் குறிக்கிறது என்றும் அவர் கூறினார்.
இந்திய விஞ்ஞானிகள் மற்றும் பொறியாளர்களின் அர்ப்பணிப்புடன் கூடிய முயற்சிகளைப் பாராட்டிய குடியரசு துணைத்தலைவர், விண்வெளி ஆராய்ச்சியில் இஸ்ரோ தொடர்ந்து குறிப்பிடத்தக்க மைல்கற்களைப் எட்டி வருவதாகக் குறிப்பிட்டார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=2185588
***
AD/RB/RJ
(Release ID: 2185732)
Visitor Counter : 4