பெருநிறுவனங்கள் விவகாரங்கள் அமைச்சகம்
வளர்ச்சிக்கான இலக்குகளை ஒருங்கிணைப்பதில் விரிவான மேம்பாட்டுக் கட்டமைப்பை உருவாக்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் பெரு நிறுவனங்கள் விவகாரத் துறையுடன் மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் கையெழுத்திட்டுள்ளது
प्रविष्टि तिथि:
01 NOV 2025 10:50AM by PIB Chennai
மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் 2025 அக்டோபர் 31 அன்று மத்திய அரசின் பெரு நிறுவனங்கள் விவகார அமைச்சகத்தின் கீழ் உள்ள தன்னாட்சி நிறுவனமான இந்திய பெரு நிறுவன விவகார அமைப்புடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இது வளர்ச்சியடைந்த இந்தியாவின் தொலைநோக்குப் பார்வைக்கு ஏற்ப தேசிய, மாநில, சுற்றுச்சூழல், சமுக நிர்வாகம், பெரு நிறுவனங்களின் சமூகப் பொறுப்புணர்வு போன்ற பல்வேறு செயல்பாடுகளின் குறியீடுகளை ஒருங்கிணைத்து, நீடித்த வளர்ச்சிக்கான இலக்குகளை எட்டும் வகையில் விரிவான கட்டமைப்பை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்த முயற்சி ஆதார அடிப்படையில் கொள்கைகள் வகுக்கப்படுவதை நெறிப்படுத்துவதையும், நிறுவனங்களின் நிலையான பங்களிப்பை ஊக்குவிப்பதையும் முக்கிய அம்சமாகக் கொண்டு செயல்படுத்தப்படும்.
இந்திய பெரு நிறுவன விவகார அமைப்பின் தலைமை இயக்குனரும், தலைமை செயல் அதிகாரியுமான திரு ஞானேஷ்வர் குமார் சிங் தலைமையில், இதற்கான முயற்சியை மேற்கொள்வது எனத் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சியில், மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்தின் திறன் மேம்பாட்டுப் பிரிவின் கூடுதல் தலைமை இயக்குநர் திரு. கிஷோர் பாபுராவ் சுர்வாடே, வர்த்தகச் சூழல் பயிற்சிப் பள்ளியின் இணைப் பேராசிரியர் மற்றும் தலைவர் டாக்டர் கரிமா தாதிச், அமைச்சகத்தின் சமூக புள்ளிவிவரப் பிரிவின் துணைத் தலைமை இயக்குநர் திருமதி ருச்சிகா குப்தா, திறன் மேம்பாட்டுப் பிரிவின் பயிற்சிப் பிரிவு இயக்குநர் திரு. சிவநாத் சிங் ஜடாவத், சமூக புள்ளிவிவரப் பிரிவின் இயக்குநர் டாக்டர் ஜியாவுல் ஹக் மற்றும் மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2185031
***
AD/SV/RJ
(रिलीज़ आईडी: 2185218)
आगंतुक पटल : 30