பிரதமர் அலுவலகம்
சத்தீஸ்கர் மாநிலத்தின் நிறுவன தினத்தை முன்னிட்டு பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்
प्रविष्टि तिथि:
01 NOV 2025 9:24AM by PIB Chennai
சத்தீஸ்கர் மாநிலத்தின் 25-வது நிறுவன தினத்தை முன்னிட்டு, பிரதமர் திரு. நரேந்திர மோடி அம்மாநில மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இயற்கை மற்றும் கலாச்சாரத்திற்காக அர்ப்பணிக்கப்பட்ட மாநிலமாகத் திகழும் சத்தீஸ்கர், வளர்ச்சிக்கான புதிய அளவுகோல்களை அமைத்து வருவதாக பிரதமர் தெரிவித்துள்ளார். ஒரு காலத்தில் நக்சல் பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்ட இம்மாநிலத்தின் பல்வேறு பகுதிகள், தற்போது வளர்ச்சிக்கான செயல்பாடுகளில் போட்டியிடுகின்றன என்று அவர் குறிப்பிட்டார். சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள திறமையான மக்களின் கடின உழைப்பும், முயற்சியும் வளர்ச்சியடைந்த இந்தியா என்ற தொலைநோக்கு பார்வையை நனவாக்குவதில் முக்கிய பங்கு வகிக்கும் என்று பிரதமர் நம்பிக்கை தெரிவித்தார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில், பிரதமர் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவித்திருப்பதாவது;
"சத்தீஸ்கர் மாநிலம் உருவான 25-வது ஆண்டு விழாவில், அம்மாநிலத்தின் அனைத்து சகோதர, சகோதரிகளுக்கும் நல்வாழ்த்துகள். இயற்கை மற்றும் கலாச்சாரத்தில் புகழ்பெற்றுள்ள இந்த மாநிலம், இன்று வளர்ச்சிக்கான புதிய தர நிலைகளை நிர்ணயிப்பதில் வெற்றிகாண்கிறது. ஒரு காலத்தில் நக்சல் பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்ட பல்வேறு பகுதிகள் தற்போது வளர்ச்சிக்காக போட்டியிடுகின்றன. கடின உழைப்பு மற்றும் திறமையான மக்களின் அர்ப்பணிப்பு உணர்வு, கடும் முயற்சியால், வளர்ச்சியடைந்த இந்தியா என்ற தொலைநோக்குப் பார்வையை நனவாக்குவதில் இம்மாநிலம் முக்கிய பங்கு வகிக்கும் என்று நான் நம்புகிறேன்."
***
(Release ID: 2185011)
AD/SV/RJ
(रिलीज़ आईडी: 2185194)
आगंतुक पटल : 13
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Bengali
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam