குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
குடியரசு துணைத்தலைவர் திரு சி.பி. ராதாகிருஷ்ணன் தலைமையில் ஐஐபிஏவின் 71வது ஆண்டு பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது
Posted On:
31 OCT 2025 7:29PM by PIB Chennai
குடியரசு துணைத்தலைவரும், இந்திய பொது நிர்வாக நிறுவனத்தின் (ஐஐபிஏ) தலைவருமான திரு. சி.பி. ராதாகிருஷ்ணன், மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்குடன் இணைந்து இன்று புதுதில்லியில் நடைபெற்ற நிறுவனத்தின் 71வது ஆண்டு பொதுக்குழு கூட்டத்திற்குத் தலைமை தாங்கினார்.
சர்தார் படேலின் பிறந்தநாளில், நாட்டின் புவிசார் அரசியல் ஒருங்கிணைப்பு மற்றும் வலுவான அகில இந்திய குடிமைப் பணிகளை நிறுவுவதில் அவரது பாரம்பரியத்திற்கு குடியரசு துணைத்தலைவர் மரியாதை செலுத்தினார். பிரதமரின் 'அனைவரும் இணைவோம், அனைவரும் உயர்வோம், அனைவரின் நம்பிக்கை, அனைவரின் முயற்சி' என்ற தொலைநோக்குப் பார்வையை வலியுறுத்திய அவர், குடிமக்களை மையமாகக் கொண்ட நிர்வாகத்தை வழங்குவதில் அரசு ஊழியர்களிடையே முறையான சேவை மற்றும் கடமை உணர்வு ஆகியவற்றின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார்.
பொது சேவையில் நெறிமுறை சார்ந்த தரங்களை வளப்படுத்த இந்தியாவின் பண்டைய ஞானத்தை மீட்டெடுப்பதை அவர் வலியுறுத்தினார். பல்வேறு மாண்புகளில் நெறிமுறைக் கொள்கைகள் குறித்து தீவிரமான ஆராய்ச்சிக்கு அவர் அழைப்பு விடுத்தார். கொள்கை வடிவமைப்பு, செயல்படுத்தல் மற்றும் சேவை வழங்கலை மேம்படுத்துவதற்காக செயற்கை நுண்ணறிவு, இயந்திர கற்றல் மற்றும் இயற்கை மொழி செயலாக்கம் (NLP) போன்ற உருமாறும் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதில் கவனம் செலுத்தி, ஆணைகளின் அடிப்படையிலிருந்து, பங்கு அடிப்படையிலான நிர்வாகத்திற்கு மாறுவதை அவர் வலியுறுத்தினார்.
இந்த நிகழ்ச்சியின்போது, திரு சி.பி.ராதாகிருஷ்ணன் ஐஐபிஏவின் மதிப்புமிக்க ஆண்டு விருதுகளை வழங்கினார். சர்தார் வல்லபாய் படேலின் 150வது பிறந்தநாளை முன்னிட்டு நிறுவனத்தில் அவரது உருவச்சிலையையும் குடியரசு துணைத்தலைவர் திறந்து வைத்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2184827
(Release ID: 2184827)
***
AD/BR/SH
(Release ID: 2184993)
Visitor Counter : 4