மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை அமைச்சகம்
கடல் மீன்வள கணக்கெடுப்பு 2025 முழுமையாக டிஜிட்டல் முறையில் மேற்கொள்ளப்படுகிறது
Posted On:
31 OCT 2025 2:02PM by PIB Chennai
கடல் மீன்வள கணக்கடுப்பு 2025, மீனவர்கள் குடியிருப்பு கணக்கெடுப்பு, வியாஸ்-பாரத், வியாஸ்-சூத்ரா செயலிகள் ஆகியவற்றை மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு, பால்வளத்துறை இணையமைச்சர் திரு ஜார்ஜ் குரியன் இன்று கொச்சியில் தொடங்கி வைத்தார்.
கடல் மீன்வள கணக்கெடுப்பு, வழக்கமான காகித அடிப்படையிலிருந்து முற்றிலுமாக டிஜிட்டல் முறைக்கு மாற்றப்பட்டுள்ளது. இது மிகவும் விரிவான, புவிசார் குறிப்புகளுடன் தற்போது வரையிலான தேசிய தரவுத்தளத்தை உருவாக்குவதோடு சான்று அடிப்படையிலான திட்டமிடலுக்கு வலுவான அடித்தளத்தையும் அமைக்கும்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் திரு ஜார்ஜ் குரியன், மீனவர்கள் நலனுக்காக டிரான்ஸ்பாண்டர்கள், ஆமை விலக்கும் கருவிகள் போன்ற பல்வேறு கருவிகளை இலவசமாக நிறுவ அரசு முன்வந்துள்ளது என்று கூறினார். அரசிடமிருந்து பல்வேறு பயன்களை பெறுவதற்கு என்எப்டிபி போர்ட்டலில் பதிவு செய்யுமாறு மீனவர்களையும், மீன் விவசாயிகளையும் அவர் வலியுறுத்தினார்.
13 கடலோர மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் சுமார் 5000 கிராமங்களிலுள்ள 1.2 மில்லியன் மீனவர் குடியிருப்புகளில் கணக்கெடுப்பு நடத்தப்படும். இதற்கான பணிகள் 2025 நவம்பர் 3 முதல் டிசம்பர் 18 வரை 45 நாட்களுக்கு மேற்கொள்ளப்படும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2184552
****
(Release ID: 2184552)
AD/SMB/AS/SH
(Release ID: 2184955)
Visitor Counter : 8