நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

சிறப்புப் பிரச்சாரம் 5.0-ன் கீழ் இந்திய உணவுக் கழகத்தின் முன்னேற்றங்கள்

Posted On: 31 OCT 2025 3:41PM by PIB Chennai

இந்திய உணவுக் கழகம், அதன் அலுவலகங்கள் மற்றும் கிடங்குகளில் தூய்மை, ஆவண மேலாண்மை மற்றும் பணியிட மேம்பாட்டை நோக்கமாகக் கொண்டு முன்னெடுத்த சிறப்புப் பிரச்சாரம் 5.0-யை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது.

மொத்தம் 1,94,465 கோப்புகளில் சுமார் 90,000 கோப்புகள் அகற்றப்பட்டுள்ளன. அக்டோபர் 2025-ன் முதல் பதினைந்து நாட்களுக்குள் மின்-கழிவுகளை அகற்றியதன் மூலம் சுமார் ரூ.16 லட்சம் வருவாய் ஈட்டப்பட்டது. மேலும், 18,000 சதுர அடிக்கும் அதிகமான இடம் தூய்மையாகியுள்ளது.

இந்த பிரச்சாரம் 2025 செப்டம்பர் 15 அன்று தொடங்கப்பட்டு, அக்டோபர் 2 அன்று தூய்மை உறுதிமொழியுடன் தொடங்கியது. நாடு முழுவதும் 900-க்கும் மேற்பட்ட இடங்களில் தூய்மைப் பணிகள் நிறைவடைந்துள்ளன. முந்தைய சிறப்புப் பிரச்சாரங்களின் போது, இந்திய உணவுக் கழகம் ரூ.70 லட்சத்திற்கும் மேற்பட்ட வருவாய் ஈட்டியதுடன், 5 லட்சத்துக்கும் அதிகமான கோப்புகளை அகற்றி, 1.5 லட்சம் சதுர அடி இடத்தை விடுவித்துள்ளது.

இந்த முயற்சிகள், இந்திய உணவுக் கழகத்தின் தூய்மை மற்றும் செயல்திறனை மேம்படுத்துவதோடு, நீடித்த நிர்வாகம் மற்றும் சுற்றுச்சூழல் பொறுப்புணர்வை வலியுறுத்தும் நோக்கத்தையும் பிரதிபலிக்கின்றன.

(Release ID: 2184607)

****

AD/SE/SH


(Release ID: 2184814) Visitor Counter : 8