எஃகுத்துறை அமைச்சகம்
                
                
                
                
                
                    
                    
                        தேசிய கனிமவள மேம்பாட்டு நிறுவனத்தின் உற்பத்தி மற்றும் வருவாய் அதிகரிப்பு
                    
                    
                        
                    
                
                
                    Posted On:
                30 OCT 2025 12:00PM by PIB Chennai
                
                
                
                
                
                
                வலுவான உள்நாட்டு எஃகு தேவைகள் மற்றும் நெகிழ்வு தன்மையுடன் கூடிய சுரங்க செயல்பாடுகள் காரணமாக தேசிய கனிம வள மேம்பாட்டு நிறுவனத்தின் செயல்பாடுகள் நடப்பு நிதியாண்டின் இரண்டாவது காலாண்டின் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. உற்பத்தி மற்றும் விற்பனையில் முன்னெப்போதும் இல்லாதவகையில் இந்நிறுவனம் குறிப்பிடத்தக்க வளர்ச்சி கண்டுள்ளது. 
நடப்பு நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் இதன் உற்பத்தி 10.21 மில்லியன் டன்னாக உள்ளது. இது முந்தைய ஆண்டின் இதே கால கட்டத்துடன் ஒப்பிடுகையில் 23 சதவீதம் அதிகமாகும். இந்நிறுவனத்தின் விற்பனை கடந்த ஆண்டை காட்டிலும் 10 சதவீதம் அதிகரித்து 10.72 மில்லியன் டன்னாக உள்ளது. 
தேசிய கனிமவள மேம்பாட்டு நிறுவனத்தின் சிறப்பான செயல்பாடு காரணமாக அதன் நிதி நிலைமைகள் இரண்டாவது காலாண்டில் வலுவான நிலையை எட்டியுள்ளது. இதன் விற்பனை 30 சதவீதம் அதிகரித்து 6261 கோடி ரூபாயாகவும், வரிக்கு முந்தைய விற்பனை 35 சதவீதம் உயர்ந்து 2271 கோடி ரூபாயாகவும் உள்ளது. வரிக்கு  பிந்தைய விற்பனை 33 சதவீதம் அதிகரித்து 1694 கோடி ரூபாயாக உள்ளது. 
இந்த நிதிநிலை அறிக்கையை வெளியிட்டு பேசிய  தேசிய கனிமவள மேம்பாட்டு நிறுவனத்தின் தலைவரும், மேலாண்மை இயக்குநருமான திரு அமித்தவா முகர்ஜி, சாதனை அளவிலான உற்பத்தி மற்றும் விற்பனை வலுவான நிதிசார் வளர்ச்சிக்கு வித்திட்டுள்ளதாகவும், நிறுவனத்தின் அனைத்து செயல்பாடுகள் குறித்த குறியீடுகள் நிறுவனத்தின் மீதான நம்பிக்கைக்கு வலு சேர்ப்பதாகவும் உள்ளது என்று குறிப்பிட்டார். உயர் தரத்திலான இரும்பு தாது விநியோகம், உற்பத்தி திறன் இலக்குகளை எட்டும்வகையில் ஆலைகள் விரிவாக்கப் பணிகள், நாட்டின் கொள்கையை பின்பற்றும்வகையில் வகுக்கப்பட்டுள்ள இலக்குகள் ஆகியவை இந்நிறுவனத்தின் வளர்ச்சிக்கு முக்கிய காரணிகளாக உள்ளது என்று அவர் கூறினார். எஃகு உற்பத்தியில் மூலப் பொருள் கிடைப்பதில் தன்னிறைவு நிலையை எட்டுவதற்கும், கார்பன் உமிழ்வு இல்லாத நிலையை எட்டும் வகையிலும் பொறுப்புணர்வுடன் நிறுவனம் செயல்பட்டு வருவதாக திரு அமித்தவா முகர்ஜி தெரிவித்துள்ளார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2184056  
***
SS/SV/AG/KR
                
                
                
                
                
                (Release ID: 2184202)
                Visitor Counter : 6