வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
                
                
                
                
                
                    
                    
                        அனைத்து பொதுத்துறை நிறுவனங்களின் கொள்முதல் அரசு மின்னணு சந்தைகள் மூலம் நடைபெறுவதற்கு மாநிலங்களுடனான ஒத்துழைப்பை வலுப்படுத்தும் நடவடிக்கைகள்
                    
                    
                        
                    
                
                
                    Posted On:
                30 OCT 2025 11:37AM by PIB Chennai
                
                
                
                
                
                
                அரசு மின்னணு சந்தையின் தலைமைச் செயல் அதிகாரியான திரு மிகிர் குமார், மத்தியப் பிரதேச மாநில தலைமைச் செயலாளர் திரு அனுராக் ஜெயினை சந்தித்து பேசினார். போபாலில் நடைபெற்ற இந்த சந்திப்பின் போது அரசு மின்னணு சந்தை தளத்தின் பயன்பாட்டை வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. 
மத்திய மாநில அமைச்சகங்கள், துறைகள், பொதுத்துறை நிறுவனங்கள், சுயாட்சி கொண்ட அமைப்புகள், உள்ளூர் நிறுவனங்கள், பஞ்சாயத் ராஜ் அமைப்புகள் உட்பட அனைத்து அரசு நிறுவனங்களின் கொள்முதல் நடவடிக்கைகள் அனைத்தும் வெளிப்படையாகவும், ஒரே மாதிரியாகவும், திறம்படவும் மேற்கொள்வதை நோக்கமாக கொண்டு இந்த மின்னணு சந்தை செயல்பட்டு வருகிறது. 
மத்தியப் பிரதேசத்தில் மாநில அரசின்  அனைத்து கொள்முதல் நடவடிக்கைகளும் வெளிப்படை தன்மையுடன் கூடியதாக இருப்பதை உறுதிசெய்ய அதற்கான கட்டமைப்புகளை மேம்படுத்தப்பட வேண்டியதன் அவசியம் குறித்து இந்த இரு அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்தினர். 
உயர் அளவிலான மொத்த வர்த்தக மதிப்பு கொண்ட மாநிலங்களுடன் அரசு மின்னணு சந்தையின் செயல் அதிகாரிகள் நிலையிலான பேச்சுவார்த்தைகளை தொடர்ந்து மேற்கொள்வதன் மூலம் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் கொள்முதல் நடவடிக்கைகளை மின்னணு சந்தையின் மூலம் மேற்கொள்ளும் பணிகளை விரைவுபடுத்த முடியும். 
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2184049
 
***
SS/SV/AG/KR
                
                
                
                
                
                (Release ID: 2184160)
                Visitor Counter : 5