பாதுகாப்பு அமைச்சகம்
இந்தியா – ரஷ்யா நாடுகளின் ராணுவம் மற்றும் ராணுவ தொழில்நுட்ப ஒத்துழைப்பு ஆணையத்தின் பணிக்குழுக் கூட்டம்
Posted On:
29 OCT 2025 5:08PM by PIB Chennai
இந்தியா – ரஷ்யா நாடுகளின் ராணுவம் மற்றும் ராணுவ தொழில்நுட்ப ஒத்துழைப்பு ஆணையத்தின் 5-வது பணிக்குழுக் கூட்டம் புதுதில்லியில் உள்ள மானக்ஷா மையத்தில் நடைபெற்றது. இந்தியா சார்பில், ஒருங்கிணைந்த பாதுகாப்புப் படையின் தலைவர் ஏர் மார்ஷல் அசுதோஷ் தீக்சித் மற்றும் ரஷ்யாவின் ஆயுதப்படை தலைமை இயக்குநரக துணைத்தலைவர் மற்றும் அந்நாட்டு பிரதிநிதிகள் குழுவின் தலைவர் லெப்டினன்ட் ஜெனரல் திரு டிலவ்ஸ்கி ஐகார் நிக்கோலாயேவிச் ஆகியோர் தலைமையில் இந்த ஆலோசனைக் கூட்டம் அக்டோபர் 28 மற்றும் 29 தேதிகளில் நடைபெற்றது.
இருநாடுகளுக்கும் இடையேயான பாதுகாப்பு ஒத்துழைப்புகளை மேலும் வலுப்படுத்துவது குறித்தும் ஏற்கனவே நடைமுறையில் உள்ள இருதரப்பு ஒப்பந்தங்களில் அடிப்படையில் புதிய முன்முயற்சிகளை மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் குறித்தும் இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
இவ்விரு நாடுகளுக்கும் இடையே பாதுகாப்புத் துறையில் ஒத்துழைப்பை மேலும் அதிகரிப்பதற்கு இந்தப் பணிக்குழு வாயிலாக தொடர்ந்து கலந்தாலோசிப்பது என்றும்
முடிவு செய்யப்பட்டது
***
(Release ID: 2183812 )
SS/SV/KPG/SH
(Release ID: 2183937)
Visitor Counter : 6