நித்தி ஆயோக்
மேம்பட்ட உற்பத்தியில் உலகளாவிய தலைமைத்துவத்திற்கான இந்தியாவின் வழிவகைகள் குறித்த அறிக்கை- நித்தி ஆயோக் வெளியிட்டது
Posted On:
29 OCT 2025 1:57PM by PIB Chennai
மேம்பட்ட உற்பத்தியில் உலகளாவிய தலைமைத்துவத்திற்கான இந்தியாவின் வழிவகைகள் குறித்த அறிக்கையை நித்தி ஆயோக்கின் முன்னணி தொழில்நுட்ப மையம் இன்று வெளியிட்டது. மகாராஷ்டிரா முதலமைச்சர் திரு தேவேந்திர ஃபட்னாவிஸ், துணை முதலமைச்சர் திரு அஜித் பவார், நித்தி ஆயோக் தலைமைச் செயல் அதிகாரி திரு பி வி ஆர் சுப்பிரமணியம், மகாராஷ்டிரா மாநில அமைச்சர் மாதுரி மிசல், முதலமைச்சருக்கான முதன்மைப் பொருளாதார ஆலோசகர் திரு பிரவின் பர்தேசி ஆகியோர் இணைந்து வெளியிட்டனர்.
முன்னணி தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி இந்தியாவின் உற்பத்தி போட்டித்தன்மையை அதிகரிப்பதற்கான துறை சார்ந்த வழிகளை இது வகுக்கிறது. இது செயற்கை நுண்ணறிவு மற்றும் இயந்திர கற்றல், மேம்பட்ட உபகரணங்கள், ரோபாட்டிக்ஸ் ஆகியவற்றை அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் காரணிகளாக அடையாளம் காட்டுகிறது. 13 முன்னுரிமை உற்பத்தித் துறைகளில் அவற்றின் தாக்கங்களை எடுத்துரைக்கிறது. இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 25% க்கும் அதிகமாக உற்பத்தி பங்களிப்பதையும், 100 மில்லியனுக்கும் அதிகமான வேலைவாய்ப்புகளை உருவாக்குவதையும் 2035-ம் ஆண்டுக்குள் மேம்பட்ட உற்பத்திக்கான முதல் மூன்று உலகளாவிய மையங்களில் இந்தியாவை நிலைநிறுத்துவதையும் இந்த வழிவகைகள் நோக்கமாகக் கொண்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2183699
***
SS/IR/AG/SH
(Release ID: 2183929)
Visitor Counter : 5