குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சகம்
2024-25-ம் நிதியாண்டுக்கான ஈவுத் தொகையாக ரூ.43.89 கோடியை தேசிய சிறு தொழில் கழக நிறுவனம் மத்திய அரசுக்கு செலுத்தியது
प्रविष्टि तिथि:
28 OCT 2025 3:08PM by PIB Chennai
குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள தேசிய சிறு தொழில் கழக நிறுவனம் 2024-25-ம் நிதியாண்டுக்கான ஈவுத் தொகையாக ரூ.43.89 கோடியை மத்திய அரசுக்கு செலுத்தியுள்ளது. இந்த ஈவுத் தொகைக்கான காசோலையை தேசிய சிறு தொழில் கழக நிறுவனத்தின் முதன்மை மேலாண்மை இயக்குநர் டாக்டர் சுப்ரான்சு சேகர் ஆச்சார்யா, மத்திய குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்துறை அமைச்சர் திரு ஜித்தன் ராம் மஞ்ஜி மற்றும் இணையமைச்சர் செல்வி ஷோபா கரந்த்லஜே ஆகியோரிடம் வழங்கினார்.
அப்போது பேசிய டாக்டர் ஆச்சார்யா, தேசிய சிறுதொழில் கழக நிறுவனம் ரூ.3,431 கோடி வருவாயை ஈட்டியுள்ளதாகவும், ரூ.146.30 கோடி அளவிற்கு வரிக்குப் பிந்தைய லாபத்தை ஈட்டியுள்ளதாகவும் இது முந்தைய ஆண்டைவிட 15.60 சதவீதம் அதிகமாகும் என்றும் சுட்டிக்காட்டினார்.
இதற்கிடையே, ஒருங்கிணைந்த ஆதரவு சேவைகள் மூலம் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்துறை நிறுவனங்களின் அதிகாரம் அளித்தலுக்கு தேசிய சிறுதொழில் கழக நிறுவனம் மேற்கொண்டு வரும் முயற்சிகளை மத்திய அமைச்சர் திரு ஜித்தன் ராம் மஞ்ஜி பாராட்டினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2183294
***
SS/IR/KPG/KR
(रिलीज़ आईडी: 2183388)
आगंतुक पटल : 16