தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
ஒடிசாவில் தொலைத்தொடர்பு சேவையின் தரம் குறித்து ட்ராய் மதிப்பீடு செய்தது
இடுகை இடப்பட்ட நாள்:
28 OCT 2025 12:02PM by PIB Chennai
ஒடிசாவில் புவனேஸ்வரிலிருந்து ரூர்கேலா வரையிலான நெடுஞ்சாலை மற்றும் ரூர்கேலா நகரம் மற்றும் அதையொட்டிய பகுதிகளில் தொலைத்தொடர்பு சேவையின் தரம் குறித்து இந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (ட்ராய்) மதிப்பீடு செய்தது. 2025 ஆகஸ்ட் மாதத்தில் நடைபெற்ற இப்பணியின் போது நகர்ப்புற பகுதிகள் தொழில்நிறுவன அமைவிடங்கள், ஊரக பகுதிக் குடியிருப்புகள் உள்ளிட்ட முக்கிய பயன்பாட்டுப் பகுதிகளில் மொபைல் தொலைத்தொடர்பு சேவையின் தரம் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. ஐதராபாதில் உள்ள ட்ராய் பிராந்திய அலுவலகத்தின் மேற்பார்வையின் கீழ், இந்த மதிப்பீடு பணி மேற்கொள்ளப்பட்டது.
2025 ஆகஸ்ட் 19 முதல் 22 வரை நடைபெற்ற இப்பணிகளின் போது ட்ராய் குழுக்கள் புவனேஸ்வரிலிருந்து ரூர்கேலா நெடுஞ்சாலை வரை 331.4 கிலோ மீட்டர் தொலைவிலும், ரூர்கேலா நகரத்தையொட்டிய பகுதிகளில் 355 கிலோ மீட்டர் தொலைவிலும் 3.6 கிலோமீட்டர் வரையிலான நடைசார்ந்த அடிப்படையிலும் மற்றும் 8 முக்கியப் பகுதிகளிலும் மதிப்பீடு செய்தது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2183226
***
SS/IR/KPG/KR
(வெளியீட்டு அடையாள எண்: 2183277)
வருகையாளர் எண்ணிக்கை : 24