வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
ஜெம் (GeM) ஏற்பாடு செய்யும் ஃபிட் இந்தியா சுதந்திர ஓட்டம் 6.0
இடுகை இடப்பட்ட நாள்:
25 OCT 2025 5:22PM by PIB Chennai
ஃபிட் இந்தியா இயக்கத்தின் கீழ் தேசிய பிரச்சாரத்துடன் இணைந்து, அரசு மின் சந்தை (ஜிஇஎம்) இன்று புதுதில்லியில் ஃபிட் இந்தியா சுதந்திர ஓட்டம் 6.0-ஐ ஏற்பாடு செய்தது.
ஜீவன் பாரதி கட்டிடத்தில் இருந்து தொடங்கிய ஓட்டம், பாபா கரக் சிங் மார்க், ஜெய் சிங் சாலை மற்றும் ஜன்பத் வழியாகச் சென்று, ஜீவன் பாரதி கட்டிடத்தில் மீண்டும் நிறைவடைந்தது. இந்த நிகழ்வில் இளைஞர்கள் முதல் மூத்த குடிமக்கள் வரை அனைத்து வயதினரும், ஜிஇஎம் அதிகாரிகள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களும் உற்சாகமாகப் பங்கேற்றனர்.
இந்த ஆண்டு பதிப்பு தூய்மை மற்றும் ஆரோக்கியம் என்ற கருப்பொருளின் கீழ் நடைபெற்றது, இது சுத்தமான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பராமரிப்பதன் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகிறது. கருப்பொருளின் உணர்வை வெளிப்படுத்தும் வகையில், ஜிஇஎம் பாதையில் ஓட்டத்திற்குப் பிந்தைய தூய்மை இயக்கத்தையும் ஏற்பாடு செய்தது, குடிமைப் பொறுப்பு மற்றும் கூட்டு நடவடிக்கையின் செய்தியை வலுப்படுத்தியது.
தேசிய முன்னேற்றத்தின் மையத்தில் தூய்மையும் சுகாதாரமும் இருப்பதாகவும், நல்லாட்சிக்கு ஆரோக்கியமான பணியாளர்கள் மற்றும் சுத்தமான சூழல் சமமாக அவசியம் என்றும் ஜிஇஎம் நம்புகிறது என்றும் ஜிஇஎம் தலைமை நிர்வாக அதிகாரி திரு மிஹிர் குமார் கூறினார்.
இந்த நிகழ்வு ஒற்றுமை, சமூக உணர்வு மற்றும் அன்றாட வாழ்வில் உடல் தகுதி மற்றும் தூய்மையின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை வளர்த்தது.
2020-ம் ஆண்டு இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தால் தொடங்கப்பட்ட ஃபிட் இந்தியா சுதந்திர ஓட்டம், சுதந்திர தினம் மற்றும் காந்தி ஜெயந்தியை நினைவுகூரும் வகையில், குடிமக்கள் சுறுசுறுப்பான வாழ்க்கை முறையை பின்பற்ற ஊக்குவிக்கிறது. 2025 அக்டோபர் 2 முதல் 31 வரை நடைபெறும் 6வது பதிப்பு, சர்தார் வல்லபாய் படேலின் பிறந்தநாளைக் குறிக்கும் அக்டோபர் 31-ம் தேதி ஒற்றுமை ஓட்டத்துடன் முடிவடையும்.
இத்தகைய பங்கேற்பு முயற்சிகள் மூலம் உள்ளடக்கிய நல்வாழ்வு, நிலைத்தன்மை மற்றும் தேசிய ஒற்றுமையை மேம்படுத்துவதில் ஜிஇஎம் உறுதியாக உள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2182455
***
AD/PKV/RJ
(வெளியீட்டு அடையாள எண்: 2182523)
வருகையாளர் எண்ணிக்கை : 28