சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

25 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட அரசின் முக்கியத்துவம் வாய்ந்த பழமையான கோப்புகளை இந்திய தேசிய ஆவணக் காப்பகத்திற்கு மாற்றுதல்

Posted On: 25 OCT 2025 2:04PM by PIB Chennai

2025 அக்டோபர் 24 அன்று நடைபெற்ற திறமையான காப்பக மேலாண்மை மற்றும் பாதுகாப்பை மையமாகக் கொண்ட தூய்மைக்கான சிறப்பு பிரச்சார இயக்கம் 5.0 - ன் ஒரு பகுதியாக, தேசிய ஆவணக் காப்பகத்தின் தலைமை இயக்குநருடன் இணைந்து, அதன் கூடுதல் செயலாளரும் துறை சார்ந்த அதிகாரியுமான திரு. ஆர்.கே. பட்டநாயக், அரசின் முக்கியத்துவம் வாய்ந்த 25 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட பல்வேறு துறைகளைச் சார்ந்த ஆவணங்கள் / கோப்புகளை மாற்றுவதற்கான பணிகளை மேற்கொண்டார்.

இந்திய தேசிய ஆவணக் காப்பக அதிகாரிகள் ஆவணங்கள் பாதுகாக்கும் அறைக்குச் சென்று, ஆவணங்கள் / கோப்புகளை அடையாளம் காண்பதற்கான மதிப்பீடுகளை மேற்கொண்டனர். தேசிய ஆவணக் காப்பகத்தின் கூடுதல் செயலாளரும், செயலாக்க அதிகாரியுமான  திரு. ஆர்.கே. பட்டநாயக் மற்றும் துணைச் செயலாளர் திருமதி ராக்கி பிஸ்வாஸ் ஆகியோரின் நேரடி மேற்பார்வையின் கீழ் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2182412

***

AD/SV/RJ


(Release ID: 2182515) Visitor Counter : 3