சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

உத்திரப் பிரதேசம், சிக்கிம் மாநிலங்களில் உள்ள பல்லுயிர் மேலாண்மைக் குழுக்களுக்கு தேசிய பல்லுயிர் ஆணையம் 18.3 லட்சம் ரூபாய் நிதி விடுவித்துள்ளது

Posted On: 25 OCT 2025 9:45AM by PIB Chennai

தேசிய பல்லுயிர் ஆணையம் உத்திரப் பிரதேசம் மற்றும் சிக்கிம் மாநிலங்களில் உள்ள பல்லுயிர் மேலாண்மைக் குழுக்களுக்கு 18.3 லட்சம் ரூபாய் நிதியை விடுவித்துள்ளது. இது உயிரியல் பன்முகத்தன்மை சட்டம், 2002 - ன் கீழ் இயங்கி வரும் கட்டமைப்புக்களின் செயல்பாடுகளுக்கான பகிர்வுத் தொகையாகும்.

இந்த நிதி, அந்தந்த மாநில பல்லுயிர் பெருக்க வாரியங்கள் மூலம் நேரடியாக இரண்டு பல்லுயிர் மேலாண்மைக் குழுக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் அலிகார் மாவட்டம், அக்ராபாத் கவுல் தாலுகாவில் அமைந்துள்ள நராவ் கிராம பல்லுயிர் மேலாண்மைக் குழு மற்றும் சிக்கிம் மாநிலம் அரிதார் லம்போகாரி ஏரிப் பகுதியில் உள்ள பல்லுயிர் மேலாண்மைக் குழு ஆகியவை இதில் அடங்கும்.

நராவ் கிராமத்தில் உள்ள நிறுவனம் வேளாண் விளைபொருட்களின்  லிக்னோசெல்லுலோசிக் உயிரித் தொகுதியிலிருந்து நொதிக்கக்கூடிய சேர்மங்களை உற்பத்தி செய்வதற்காகவும், லம்போகாரி ஏரிப் பகுதியில் உள்ள மற்றொரு நிறுவனத்தின் சேகரிக்கப்பட்ட நீர் மற்றும் மண் மாதிரிகளில் உள்ள நுண்ணுயிரிகளை ஆராய்ச்சி செய்யும் நோக்கத்திற்காகவும் இந்த நிதியுதவி வழங்கப்படுகிறது.

தேசிய பல்லுயிர் ஆணையம் இந்த உள்ளூர் பாதுகாவலர்களுக்கு பல்லுயிர் பெருக்கப் பாதுகாப்பு, ஆதார வளங்களின் நீடித்த மேலாண்மை போன்ற நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொள்ள உதவிடும் வகையில்  இந்த நிதியுதவி பயன்படுத்தப்படுகிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2182372  

***

AD/SV/RJ


(Release ID: 2182442) Visitor Counter : 12