நிலக்கரி அமைச்சகம்
வர்த்தக நிலக்கரி ஏலத்தின் கீழ் மூன்று நிலக்கரி வளங்களுக்கான உரிமைகள் ஒப்படைப்பு ஆணைகள் வெளியீடு
Posted On:
24 OCT 2025 12:46PM by PIB Chennai
மத்திய நிலக்கரி அமைச்சகத்தால் நியமிக்கப்பட்ட அதிகாரி 2025 அக்டோபர் 23 அன்று வர்த்தக நிலக்கரி ஏலத்தின் கீழ் மூன்று நிலக்கரி வளங்களுக்கான உரிமைகள் ஒப்படைப்பு ஆணைகளை வெளியிட்டுள்ளார்.
இந்த மூன்று நிலக்கரி வளங்களுக்கான நிலக்கரி சுரங்க மேம்பாடு மற்றும் உற்பத்தி ஒப்பந்தங்கள் 2025 ஆகஸ்ட் 21 அன்று கையெழுத்தாகியிருந்தன.
இந்த நடவடிக்கை, நாட்டில் வர்த்தக ரீதியிலான நிலக்கரி உற்பத்தி மற்றும் சுரங்கத் துறையின் செயல்திறனை மேம்படுத்துவதில் மேலும் ஒரு முக்கிய முன்னேற்றமாகும்.
ராஜ்கமர் டிப்சைடு (தேவ்னாரா), வடக்கு தங்கர்திஹி, மற்றும் மஹுவாகர்ஹி என்ற மூன்று நிலக்கரி வளங்களில் இரண்டு வளங்கள் பகுதியளவில் ஆய்வு செய்யப்பட்டவை மற்றும் ஒன்று முழுமையாக ஆய்வு செய்யப்பட்ட வளமாகும்.
இந்த முழுமையாக ஆய்வு செய்யப்பட்ட வளத்தின் அதிகபட்ச உற்பத்தி திறன் ஆண்டுக்கு சுமார் 1 மில்லியன் டன் ஆகும்.
மூன்று வளங்களின் மொத்த புவியியல் கையிருப்புகள் சுமார் 1,484.41 மில்லியன் டன்கள் ஆகும்.
இவை ஆண்டுக்கு சுமார் ரூ.189.77 கோடி வருவாய் ஈட்டும் எனவும், சுமார் ரூ.150 கோடி மதிப்பிலான மூலதன முதலீடுகளை ஈர்க்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் மூலம் 1,352 பேருக்கு நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகள் உருவாகும்.
இதனுடன், வர்த்தக நிலக்கரி ஏலத்தின் கீழ் இதுவரை மொத்தம் 130 நிலக்கரி வளங்களுக்கு உரிமங்கள் மற்றும் ஒதுக்கீட்டு ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன.
இவற்றின் மொத்த உச்ச உற்பத்தி திறன் ஆண்டுக்கு சுமார் 267.244 மில்லியன் மெட்ரிக் டன்கள் ஆகும்.
இந்த அனைத்து வளங்களும் செயல்பாட்டுக்கு வந்த பின், ஆண்டுதோறும் சுமார் ரூ. 37,700 கோடி வருவாய் ஈட்டும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. மேலும், மொத்தம் 3,61,301 பேருக்கு நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகள் உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
(வெளியீட்டு அடையாள எண்: 2182057)
***
SS/VK/SH
(Release ID: 2182358)
Visitor Counter : 10