நிதி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

காசியாபாத்தில் புதிதாகக் கட்டப்பட்ட மத்திய சரக்கு மற்றும் சேவை வரி நிலையத்தை மத்திய நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் திறந்து வைத்தார்

Posted On: 24 OCT 2025 5:09PM by PIB Chennai

மத்திய நிதி மற்றும் பெருநிறுவன விவகார அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன், காசியாபாத்தின் ராணி ஜான்சி மார்க்கில் அமைந்துள்ள புதிதாக கட்டப்பட்ட மத்திய சரக்கு மற்றும் சேவை வரி நிலையத்தை இன்று திறந்து வைத்தார். மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியத்தின் (சிபிஐசி) மூத்த அதிகாரிகள், வர்த்தக பிரதிநிதிகள் மற்றும் பிற பிரமுகர்கள் இந்த விழாவில் கலந்து கொண்டனர்.

இந்தியாவின் வரி நிர்வாகத்தை வலுப்படுத்துவதிலும், வெளிப்படையான, குடிமக்களை மையமாகக் கொண்ட நிர்வாக கட்டமைப்பை முன்னேற்றுவதிலும் சிபிஐசி மற்றும் அதன் கள அமைப்புகளின் முயற்சிகளை அமைச்சர் தனது உரையில் பாராட்டினார். எளிமைப்படுத்தப்பட்ட நடைமுறைகளுடன் தொழில்நுட்பம் சார்ந்த இணக்கம், மேம்பட்ட வெளிப்படைத்தன்மை மற்றும் வரி செலுத்துவோரின் பங்கேற்பு ஆகியவற்றை திருமதி சீதாராமன் வலியுறுத்தினார்.

அடுத்த தலைமுறை வருவாய் உள்கட்டமைப்பு, அடுத்த தலைமுறை வரிவிதிப்புக்கு ஏற்ப செயல்பட வேண்டியதன் அவசியத்தை மத்திய நிதியமைச்சர் எடுத்துரைத்தார். மேலும் அனைத்து வரி அதிகாரிகளும்  அதிக பரிவு, அதிக மரியாதை மற்றும் அதிக நேர்மையைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார். சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட ஜிஎஸ்டி 2.0 பற்றி விரிவாகப் பேசிய நிதியமைச்சர், இது உலகளாவிய அளவில் ஒரு குறிப்பிடத்தக்க பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது என்றும், இந்தியாவின் முற்போக்கான பொருளாதார தொலைநோக்குப் பார்வையின் அடையாளமாக திகழ்கிறது என்றும் குறிப்பிட்டார். இந்த சீர்திருத்தம் நவராத்திரி மற்றும் தீபாவளி பண்டிகைக் காலங்களில் குறிப்பிடத்தக்க வேலை வாய்ப்புகளை உருவாக்கியுள்ளது என்றும், சாமானிய மக்களின் வாழ்க்கையை எளிதாக்கியுள்ளது என்றும் அவர் எடுத்துரைத்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2182212

(Release ID: 2182212)

***

SS/BR/SH


(Release ID: 2182356) Visitor Counter : 9