உள்நாட்டு விமானப் போக்குவரத்து அமைச்சகம்
உள்நாட்டு விமான நிறுவனங்களின் குளிர்கால விமான சேவை அட்டவணை அறிவிப்பு
Posted On:
24 OCT 2025 4:51PM by PIB Chennai
திட்டமிடப்பட்ட உள்நாட்டு விமான நிறுவனங்களின் குளிர்கால விமான சேவை அட்டவணை (2025 அக்டோபர் 26 முதல் 2026 மார்ச் 28 வரை) வெளியிடப்பட்டுள்ளது.
2025 செப்டம்பர் மாதம் நடைபெற்ற விமான புறப்பாடு, வருகைக்கான இடத்தை ஒதுக்குவதற்கான (ஸ்லாட்) மாநாட்டுக் கூட்டத்திற்குப் பிறகு இந்த அட்டவணை இறுதி செய்யப்பட்டுள்ளது.
2025 குளிர்கால அட்டவணையின் படி, 126 விமான நிலையங்களிலிருந்து வாரத்திற்கு மொத்தம் 26,495 விமான புறப்பாடுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இது 2024 குளிர்கால அட்டவணையுடன் ஒப்பிடுகையில் சுமார் 5.95 சதவீத வளர்ச்சியைக் குறிக்கிறது. கோடைக்கால அட்டவணையில் 129 விமான நிலையங்களிலிருந்து 25,610 புறப்பாடுகள் மட்டுமே இருந்தன.
இந்த 126 விமான நிலையங்களில், அமராவதி, ஹிசார், பூர்னியா மற்றும் ரூப்சி ஆகியவை விமான நிறுவனங்களால் முன்மொழியப்பட்ட புதிய விமான நிலையங்களாகும்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2182189
(வெளியீட்டு அடையாள எண்: 2182189)
***
SS/VK/SH
(Release ID: 2182352)
Visitor Counter : 11