ஆயுஷ்
கல்லீரல் நலன் குறித்த தேசிய கருத்தரங்கை மத்திய ஆயுஷ் அமைச்சகம் ஐசிஎம்ஆர் உடன் இணைந்து நடத்துகிறது
Posted On:
24 OCT 2025 4:07PM by PIB Chennai
ஆயுஷ் அமைச்சகம் மற்றும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் இணைந்து கல்லீரலைப் பாதுகாப்போம், உயிரைக் காப்போம் என்ற கருப்பொருளில் இரண்டு நாள் தேசிய கருத்தரங்கை அக்டோபர் 25 மற்றும் 26 ஆம் தேதிகளில் புவனேஸ்வரில் நடத்த உள்ளன.
சான்றுகள் அடிப்படையிலான பாரம்பரிய மருத்துவத்திற்கான உறுதிப்பாட்டை முன்னெடுத்துச் செல்லும் வகையில், மத்திய ஆயுர்வேத ஆராய்ச்சி கவுன்சில் மற்றும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) இணைந்து இந்த கருத்தரங்கை ஏற்பாடு செய்துள்ளன.
"கல்லீரல் மற்றும் பித்தநீர் நலனுக்கு ஆயுர்வேதம் முழுமையான அணுகுமுறையை வழங்குகிறது. தடுப்பு, சமநிலை மற்றும் நீடித்த சுகாதாரத்தை வலியுறுத்துகிறது. கூட்டு ஆராய்ச்சி மூலம் ஆயுர்வேத கோட்பாடுகளை அறிவியல் ரீதியாக சரிபார்த்து உலகளவில் நம்பகத்தன்மையை வலுப்படுத்துகிறோம்," என மத்திய ஆயுர்வேத ஆராய்ச்சி கவுன்சிலின் இயக்குநர் பேராசிரியர் ரபிநாராயண் ஆச்சார்யா தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2182157
(வெளியீட்டு அடையாள எண்: 2182157)
***
SS/VK/SH
(Release ID: 2182332)
Visitor Counter : 9