பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்
சிறப்பு இயக்கம் 5.0-ன் கீழ் மத்திய அரசின் அனைத்து அமைச்சகங்கள் மற்றும் துறைகளின் தீவிர பங்கேற்பு
Posted On:
24 OCT 2025 4:13PM by PIB Chennai
சிறப்பு இயக்கம் 5.0-ன் கீழ், மத்திய அரசின் அனைத்து அமைச்சகங்கள் மற்றும் துறைகளும் தூய்மை மற்றும் நிலுவையிலுள்ள பணிகளை நிவர்த்தி செய்வதற்கான முழுமையான அணுகுமுறையுடன் பங்கேற்று வருகின்றன. இந்த மாபெரும் நாடு தழுவிய இயக்கத்தில் அரசு துறைகள் வரலாறு படைதுள்ளன.
அக்டோபர் 24, 2025 நிலவரப்படி, நாடு முழுவதும் 4.95 லட்சம் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதன் மூலம், 130.54 லட்சம் சதுர அடி அலுவலக இடங்கள் தூய்மைபடுத்தபட்டுள்ளன. மேலும், பழைய பொருட்களை அகற்றியதன் மூலம் ரூ. 377.8 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளதுடன், 5.45 லட்சம் பொதுக் குறைகள் நிவர்த்தி செய்யப்பட்டுள்ளன.
சமூக ஊடகங்களில் சிறப்பு இயக்கம் 5.0 அதிக வரவேற்பைப் பெற்றுள்ளது. சிறப்பு இயக்கம் 5.0 நிறைவடைய இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், இந்திய அரசின் அனைத்து அமைச்சகங்கள் மற்றும் துறைகளும், அக்டோபர் 31, 2025-க்குள் முழுமையான இலக்கினை எட்ட முயற்சிகளை மேலும் தீவிரப்படுத்த ஊக்குவிக்கப்படுகின்றன. இம்முயற்சிகள் மூலம், நிர்வாகத்தில் தூய்மை, செயல்திறன் மற்றும் பொறுப்புக்கூறும் கலாச்சாரம் ஊக்குவிக்கப்படுகிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2182162
***
SS/SE/SH
(Release ID: 2182303)
Visitor Counter : 7