சுரங்கங்கள் அமைச்சகம்
முக்கியமான கனிம மறுசுழற்சிக்கான ரூ.1,500 கோடி ஊக்கத்தொகைத் திட்டம்
Posted On:
24 OCT 2025 2:40PM by PIB Chennai
முக்கிய கனிம மறுசுழற்சிக்கான ரூ 1,500 கோடி ஊக்கத்தொகை திட்டத்திற்கு செப்டம்பர் 3 அன்று மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. தேசிய முக்கிய கனிம இயக்கத்தின் ஒரு பகுதியாக இருக்கும் இந்தத் திட்டங்கள், குறுகிய காலத்தில் விநியோகச் சங்கிலி நிலைத்தன்மையை உறுதி செய்வதற்கான விவேகமான வழியை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளன. அதைத் தொடர்ந்து, மத்திய சுரங்க அமைச்சகம் அக்டோபர் 2, 2025 அன்று பங்குதாரர்களின் ஆலோசனைகளை மேற்கொண்ட பிறகு விரிவான திட்ட வழிகாட்டுதல்களை வெளியிட்டது. மேலும் ஊக்கத்தொகை திட்டத்திற்கான விண்ணப்ப செயல்முறை தொடங்கப்பட்டுள்ளது.
மின்-கழிவுகள், செயலிழந்த லித்தியம் அயன் பேட்டரிகள் மற்றும் ஆயுட்கால வாகனங்களில் உள்ள வினையூக்கி மாற்றிகள் போன்ற பிற கழிவுகள் இந்தத் திட்டத்திற்கான தகுதியான மூலப்பொருட்கள் ஆகும். சில மதிப்பீடுகளின்படி, நாட்டில் ஆண்டுதோறும் மின்-கழிவுகள் உற்பத்தி 1.75 மில்லியன் டன்னாகவும், செயல்படுத்தப்பட்ட லித்தியம் அயன் பாட்டரிகள் சுமார் 60 கிலோ டன்னாகவும் உள்ளது. 2025-26 மத்திய பட்ஜெட் மூலம் செயல்படுத்தப்பட்ட இதற்கான கட்டண வரிகளில் சுங்க வரி நீக்கம் இறக்குமதியை எளிதாக்கும். அடுத்த 4-5 ஆண்டுகளில், இந்த கழிவுப் பொருட்களின் கிடைக்கும் தன்மை பன்மடங்கு அதிகரிக்கும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிபம்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2182108
***
SS/PKV/SH
(Release ID: 2182278)
Visitor Counter : 6