PIB Headquarters
சரக்கு மற்றும் சேவை வரிக் குறைப்பு: கர்நாடகாவில் காபித் தோட்டங்கள் முதல் தொழில்நுட்ப மையங்கள் வரை பலனளிக்கிறது
Posted On:
24 OCT 2025 9:59AM by PIB Chennai
சரக்கு மற்றும் சேவை வரி மறுசீரமைப்பு நடவடிக்கை இந்தியாவின் 71 சதவீத காபியை உற்பத்தி செய்யும் கர்நாடகாவுக்கு ஊக்கமளித்துள்ளது. காபி எக்ஸ்ட்ராக்ட், எசன்ஸ் மற்றும் இன்ஸ்டன்ட் காபி ஆகியவற்றின் மீதான சரக்கு மற்றும் சேவை வரி 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளதால், சிறு விவசாயிகள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் பலன் அடைகின்றனர்.
வரி குறைப்பால் பால் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள 26 லட்சம் விவசாயிகளும் பயனடைய உள்ளனர். அவர்கள் உற்பத்தி செய்யும் பால் மற்றும் பன்னீர் மீதான சரக்கு மற்றும் சேவை வரி முற்றிலும் நீக்கப்பட்டுள்ளது. நெய் மற்றும் வெண்ணெயின் விலை 5 முதல் 7 சதவீதம் குறையும்.
கர்நாடகாவின் கடலோரப் பகுதிகளில் விளையும் முந்திரி, தென்னை நார் மற்றும் கடல் உற்பத்திப் பொருட்களுக்கு வரி 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளதால் பெண்கள் தலைமையிலான குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களும் கடலோர வாழ்வாதாரத்தை நம்பியுள்ள மக்களும் பயனடைகின்றனர்.
டிராக்டர்கள், இயந்திரங்கள், சிமெண்ட், கிரானைட் ஆகியவை 6 முதல் 8 சதவீதம் விலை குறைந்துள்ளதால் தொழிற்துறையினரும் இந்த சாதனங்களை பயன்படுத்தும் விவசாயிகளும் பயனடைகின்றனர்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2182006
***
SS/VK/RJ
(Release ID: 2182072)
Visitor Counter : 8