சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம்
காற்று தர மேலாண்மை ஆணையத்தின் புதிய முழுநேர உறுப்பினர் செயலராக திரு தருண் குமார் பிதோடே பொறுப்பேற்பு
प्रविष्टि तिथि:
23 OCT 2025 7:09PM by PIB Chennai
2009 ஆம் ஆண்டு இந்திய ஆட்சிப்பணி (ஐஏஎஸ்) அதிகாரியும், மத்திய பிரதேச மாநில அரசு அதிகாரியுமான திரு தருண் குமார் பிதோடே, தேசிய தலைநகர் மண்டலம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளுக்கான காற்று தர மேலாண்மை ஆணையத்தின் புதிய முழுநேர உறுப்பினர் செயலராக இன்று பொறுப்பேற்றார். இந்த நியமனம் இன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.
மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்தில் கூடுதல் செயலராக பணியாற்றிய திரு தருண் குமார் பிதோடே, காற்றுத் தர மேலாண்மை ஆணையத்தின் உறுப்பினர் செயலர் பதவியை ஏற்றுள்ளார். அவர் 08.09.2029 வரை ஐந்து ஆண்டுகள் அல்லது அடுத்த உத்தரவு வரும் வரை இப்பதவியில் நியமிக்கப்பட்டுள்ளார்.
(வெளியீட்டு அடையாள எண்: 2181941)
***
SS/VK/SH
(रिलीज़ आईडी: 2181982)
आगंतुक पटल : 19