அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
உயிரி தொழில்நுட்பத்துறையின் திட்டங்கள்: மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் ஆய்வு
Posted On:
23 OCT 2025 4:59PM by PIB Chennai
மாநிலங்களின் பங்களிப்புடன் வலுவான உயிரியல் புதுமை சூழலமைப்பை உருவாக்க வேண்டியதன் அவசியத்தை மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங், வலியுறுத்தியுள்ளார்.
இதற்காக மாநில அரசுகளோடு இணைந்து பணியாற்றி அவர்களின் பங்களிப்பையும் இதற்கு முழுமையாக பயன்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
உயிரி தொழில்நுட்பத் துறையின் ஆய்வு கூட்டத்தில் பங்கேற்ற அவர், இந்தியாவின் உயிரி-புதுமை வளர்ச்சிக்கான புதிய திட்டங்களை மதிப்பீடு செய்தார். மண்டல அளவிலான புதுமை மையங்கள், மாநிலங்களின் உயிரி தொழில்நுட்ப திறன் மதிப்பீடு போன்ற திட்டங்கள் மூலம் நாட்டின் உயிரியல் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் முயற்சிகளை ஆராய்ந்தார்.
இந்தியாவின் உயிரி தொழில்நுட்பத் துறை தேசிய வளர்ச்சியின் முக்கிய தூணாக உருவெடுத்து, சுகாதாரம், விவசாயம், சுற்றுச்சூழல், தொழில்துறை புத்தாக்கம் மூலம் பொருளாதாரத்திற்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பு செய்கிறது என்றார்.
உலக பவர்லிஃப்டிங் சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற துறையின் இணைச் செயலர் ஏக்தா விஷ்ணோயை அமைச்சர் கௌரவித்தார். இது இந்தியாவின் உலக விளையாட்டு அரங்கில் வளர்ந்து வரும் பலத்தின் பிரதிபலிப்பு என்று அவர் பாராட்டினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2181857
(வெளியீட்டு அடையாள எண்: 2181857)
***
SS/VK/SH
(Release ID: 2181979)
Visitor Counter : 6