அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
azadi ka amrit mahotsav

அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறையில் தூய்மை பணிகளுக்கான சிறப்பு இயக்கம்

Posted On: 23 OCT 2025 4:17PM by PIB Chennai

நாடு முழுவதிலுமுள்ள அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறையின் கீழ் இயங்கி வரும் தன்னாட்சி பெற்ற அமைப்புகள் மற்றும் துணை அலுவலகங்களில் தூய்மை பணிகளுக்கான சிறப்பு பிரச்சாரம் மேற்க்கொள்ளப்பட்டு வருகிறது.

மத்திய அரசால் தொடங்கப்பட்ட தூய்மை பணிகளுக்கான பிரச்சார இயக்கம் 5.0-ன் கீழ் அரசு துறைகள் வாயிலாக நிர்வாக சீரமைப்பு மற்றும் பொது குறைதீர்ப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக செப்டம்பர் மாதம் 16 முதல் 30 வரை இதற்கான முன்னேற்பாட்டு பணிகள் நடைபெற்றன. இந்த பிரச்சார இயக்கம் அக்டோபர் 2-ம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த பிரச்சார இயக்கத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் தூய்மை பணிகள் மூலம் இதுவரை 1,15,582 சதுரடி அளவிலான அலுவலக இடங்கள் தூய்மைப்படுத்தப்பட்டுள்ளன. பணியிடங்களில் தூய்மையை பராமரிக்கவும், திறன்களை மேம்படுத்தும் வகையில் மத்திய அரசு வலுவான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. பொது குறைதீர்ப்பு நடவடிக்கை மூலம் 90 மனுக்கள் பெறப்பட்டு அவற்றில் 63 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2181826

***

(Release ID: 2181826)

SS/VS/AS/SH


(Release ID: 2181957) Visitor Counter : 5