வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறையை சுத்தமாக வைத்திருக்கவும் நிலுவையில் உள்ள பணிகளை குறைக்கவும் சிறப்பு பிரச்சாரம் 5.0 தொடக்கம்

இடுகை இடப்பட்ட நாள்: 23 OCT 2025 11:43AM by PIB Chennai

நிர்வாக சீர்திருத்தம் மற்றும் பொதுமக்கள் குறைதீர்ப்புத் துறையின் வழிகாட்டுதலின் கீழ், தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறை சிறப்பு பிரச்சாரம் 5.0-ஐ நடைமுறைப்படுத்தி வருகிறது. அலுவலகத்தை  நிரந்தரமாக சுத்தமாக வைத்திருக்கவும் நிலுவையிலுள்ள அலுவலக பணிகளை குறைக்கவும் இப்பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

முதல் பதினைந்து நாட்களில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் எட்டப்பட்டுள்ளது. பிரதமர் அலுவலகம், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாநில அரசுகள், அமைச்சரவை, பொதுமக்கள் குறைகள் உள்ளிட்ட அனைத்து நிலுவை கோப்புகளும் கண்டறியப்பட்டு முறையாக தீர்க்கப்படுகின்றன.

2025 அக்டோபர் 22 நிலவரப்படி, பிரதமர் அலுவலக குறிப்புகளில் 47% மற்றும் பொதுமக்கள் குறைகளில் 60% முடிக்கப்பட்டுள்ளன. மின்னணு கோப்புகளில் 75% முடித்து வைக்கப்பட்டன. சுத்தம் தொடர்பாக 291 பிரச்சாரங்கள் நிறைவடைந்துள்ளன. இப்பிரச்சார இயக்கம், தூய்மை, திறமையான பதிவு மேலாண்மை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது. 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்:https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2181721

***

SS/VK/SG

 


(வெளியீட்டு அடையாள எண்: 2181922) வருகையாளர் எண்ணிக்கை : 28
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Marathi , Punjabi