PIB Headquarters
சரக்கு மற்றும் சேவை வரிக்குறைப்பு திரிபுரா மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு வலு சேர்க்கிறது
Posted On:
23 OCT 2025 10:15AM by PIB Chennai
நாட்டின் வடக்கிழக்கு பகுதியில் அமைந்துள்ள திரிபுரா மாநிலம் இயற்கை அழகுடன் கூடிய சமவெளிப்பகுதிகளையும், வளமான பராம்பரியத்தையும் கொண்ட மாநிலமாகும். இம்மாநிலத்தின் மொத்த நிலப்பரப்பில் 60 சதவீதம் வனப்பகுதிகளை உள்ளடக்கியதாகும். 24 சதவீத நிலப்பரப்பில் விவசாய பணிகள் மேற்க்கொள்ளப்பட்டு வருகிறது. இயற்கை அன்னையின் மகளாக கருதப்பட்டு வரும் திரிபுரா மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு வேளாண் சார்ந்த தொழில்கள் தொடர்ந்து உத்வேகம் அளித்து வருகிறது. இங்கு நிலவும் சூழல் விவசாயப் பணிகளுக்கு ஏற்ற வகையில் உள்ளதால் தோட்டக்கலை பயிர்களான அன்னாசி, பலா மற்றும் இதர பழவகைகள் பயிரிடப்படுகின்றன. பட்டுப்புழு வளர்ப்பிற்க்கு வலுவான சூழல் நிலவுவதுடன் தேயிலை உற்பத்தியும் குறிப்பிடத்தக்க அளவில் உள்ளது. கூடுதலாக இம்மாநிலத்தின் கைத்தறி, கைவினைப்பொருட்கள் மற்றும் பாரம்பரிய கலைப்பொருட்கள் இங்கு பிரபலமானவை.
சரக்கு மற்றும் சேவை வரிகுறைப்பு இம்மாநிலத்தில் உள்ள வேளாண் சார்ந்த தொழில்களுக்கு புதிய வாய்ப்புகளையும், போட்டித்தன்மையையும் அதிகரித்து வருகிறது. கைத்தறி ஜவுளிகள் ஆயத்த ஆடைகள், சிலவகையான தேயிலை மற்றும் பட்டுபொருட்களுக்கான ஜிஎஸ்டி விகிதம் குறைக்கப்பட்டுள்ளதன் காரணமாக அதற்கான சந்தைகள் விரிவடைந்துள்ளதுடன் நுகர்வோருக்கு குறைந்த விலையில் கிடைக்கவும் வகை செய்துள்ளது. மேலும் உள்ளூர் கைவினைஞர்கள், நெசவாளர்கள் மற்றும் விவசாயிகளுக்கு உதவிகரமாக அமைந்துள்ளது. ஜிஎஸ்டி சீர்திருத்த நடவடிக்கைகள் வரிச்சுமையை குறைத்துள்ளதுடன் உள்ளூர் தொழில்களுக்கு உத்வேகம் அளிப்பதாகவும் அமைந்துள்ளது. இது அம்மாநிலத்தின் கிராமப்புற பொருளாதார வளர்ச்சிக்கும், வேலைவாய்ப்பு உருவாக்கத்திற்கும், வடகிழக்கு மாநிலங்களின் மேம்பாட்டிற்கும் உத்வேகம் அளிப்பதாக அமைந்துள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2181700
***
SS/VS/AS/SG
(Release ID: 2181921)
Visitor Counter : 4