PIB Headquarters
அடுத்த தலைமுறை தொழில்நுட்பத்தை வலுப்படுத்துதல்
प्रविष्टि तिथि:
22 OCT 2025 5:11PM by PIB Chennai
கடந்த 10 ஆண்டுகளில் இந்தியா தனது உள்நாட்டு செமிகண்டக்டர் திறனை சீராக அதிகரித்து வருகிறது. இந்த முயற்சிகள் உலகளாவிய சிப் வடிவமைப்பு சூழலில் முக்கிய பங்குதாரராக இந்தியாவை உருவாக்குவதற்கு வலுவான அடித்தளம் அமைத்துள்ளன.
இந்த முன்னேற்றத்தின் அடிப்படையில் நவீன செமிகண்டக்டர் வடிவமைப்பில் 7 நானோ மீட்டர் பிராசசரை உருவாக்குவதில் இந்தியா முன்னேற்றம் கண்டுள்ளது. 2025 அக்டோபர் 18 அன்று இதனை அறிவித்த மத்திய அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ், இந்த முன்முயற்சி இந்தியாவின் செமிகண்டக்டர் பயணத்தில் குறிப்பிடத்தக்க தருணத்தைக் குறிக்கிறது என்றும் நாட்டின் தற்சார்பு, அடுத்த தலைமுறை, தொழில்நுட்பக் கண்டுபிடிப்பு ஆகியவற்றுக்கான உறுதியை மீண்டும் நிலை நிறுத்துகிறது என்றும் கூறினார்.
சக்தி முன்முயற்சி மூலம் இந்தியாவின் பிராசசர் வடிவமைப்பு சூழலில் முக்கிய நிறுவனமான சென்னை ஐஐடி இந்த 7 நானோ மீட்டர் பிராசசரை உருவாக்கி வருகிறது. இந்த முன்முயற்சி இந்தியா செமிகண்டக்டர் இயக்கத்திற்கு இணக்கமானதாக உள்ளது. உயர் செயல்திறன் மற்றும் எரிசக்தி திறன் கொண்ட 7 நானோ மீட்டர் பிராசசர் நிதிச்சேவைகள், தகவல் தொடர்புகள், பாதுகாப்பு, உத்திசார் துறைகள் ஆகியவற்றின் செர்வர் பயன்பாட்டை இலக்காகக் கொண்டது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2181546
***
SS/SMB/KPG/SH
(रिलीज़ आईडी: 2181646)
आगंतुक पटल : 27