நிலக்கரி அமைச்சகம்
நீடிக்கத்தக்க எரிசக்தி மையத்தை நிறுவ கோல் இந்தியா நிறுவனமும் சென்னை ஐஐடி-யும் கைகோர்த்துள்ளன
प्रविष्टि तिथि:
22 OCT 2025 4:45PM by PIB Chennai
சென்னை ஐஐடி-யில் நீடிக்கத்தக்க எரிசக்தி மையத்தை நிறுவ கோல் இந்தியா நிறுவனம், சென்னை ஐஐடி-யுடன் புதன் அன்று (22.10.2025) புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. இந்த ஒப்பந்தத்தில் கோல் இந்தியா நிறுவனத்தின் இயக்குநர் (தொழில்நுட்பம்), சென்னை ஐஐடி-யின் இயக்குநர் திரு வி காமகோடி ஆகியோர் கையெழுத்திட்டனர். கோல் இந்தியா நிறுவனத்தலைவர் திரு பி எம் பிரசாத் மற்றும் மூத்த அதிகாரிகள் முன்னிலை வகித்தனர்.
இந்த மையம், நீடிக்கத்தக்க எரிசக்தி தொழில்நுட்பங்களில் நவீன ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, திறன் கட்டமைப்பு முன்முயற்சிகளுக்கு முக்கிய இடமாக திகழும். நிலக்கரி சுரங்கங்களின் மறுபயன்பாடு, குறைந்த அளவு கார்பன் வெளியிடும் தொழில்நுட்பங்களை உருவாக்குதல், இந்தியாவின் தூய்மை எரிசக்தி எதிர்காலத்தில் மதிப்புமிகு பொருளாக நிலக்கரியை உருவாக்குதல்ஆகியவற்றில் இந்த மையம் கவனம் செலுத்தும். 2070-க்குள் நாட்டின் நிகர பூஜ்ய லட்சியத்தை எட்டுவதற்கு உள்நாட்டு ஆராய்ச்சி, புத்தாக்கம், தொழில்நுட்ப மேம்பாடு ஆகியவற்றின் மூலம் இந்தியாவின் எரிசக்தி மாற்றத்திற்கு பகிரப்பட்ட உறுதிப்பாட்டை இந்தக் கூட்டாண்மை எடுத்துக்காட்டுகிறது.
இந்த நிகழ்ச்சியில் பேசிய கோல் இந்தியா நிறுவனத் தலைவர் திரு பி எம் பிரசாத், நீடிக்கத்தக்க வளர்ச்சியை நோக்கிய கோல் இந்தியாவின் பயணத்தில் இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் வரலாற்றுச் சிறப்புமிக்க நடவடிக்கையைக் குறிக்கிறது என்றார். சென்னை ஐஐடி-யுடனான ஒத்துழைப்பின் மூலம் எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்யவும், கரியமில வாயு நீக்கத்திற்கும், சமூக பொருளாதார முன்னேற்றத்திற்கும் உள்நாட்டிலேயே தீர்வுகளை உருவாக்க கோல் இந்தியா நிறுவனம் முயற்சி செய்கிறது என்றும் அவர் கூறினார்.
சென்னை ஐஐடி இயக்குநர் திரு வி காமகோடி பேசுகையில், குறைந்த அளவு கார்பன் பொருளாதாரத்தை வழிநடத்தும் இந்தியாவின் மாற்றத்திற்கு சென்னை ஐஐடி-யின் பயணத்தில் முக்கிய அம்சமாக இந்த தொழில்துறை – கல்வி நிறுவன ஒத்துழைப்பு விளங்குகிறது என்றார். இந்தியாவின் நீடிக்கத்தக்க எரிசக்தி எதிர்காலத்திற்கு ஆதரவான தீர்வுகளை ஒன்றிணைந்து உருவாக்குவது எங்களின் நோக்கம் என்றும் அவர் கூறினார்.
இந்தியாவின் பசுமை எரிசக்தி மாற்றத்திற்கு உதவ, பிஎச்.டி, அதற்கு பிந்தைய படிப்பு, உள்ளுறை பயிற்சித் திட்டங்கள், அடுத்த தலைமுறை ஆராய்ச்சியாளர்கள் மற்றும் பொறியாளர்களை உருவாக்குவது ஆகியவற்றின் மூலம் இந்த மையம் மனித முதலீட்டு மேம்பாட்டிற்கும் பங்களிப்பு செய்யும்.
***
(Release ID: 2181527)
SS/SMB/KPG/RJ
(रिलीज़ आईडी: 2181593)
आगंतुक पटल : 48