எஃகுத்துறை அமைச்சகம்
எஃகு இறக்குமதி பிரச்சனைகள் குறித்த விவாதத்தை எஃகு அமைச்சகம் அக்டோபர் 27 ஆம் தேதி நடத்துகிறது
Posted On:
22 OCT 2025 12:00PM by PIB Chennai
எஃகு இறக்குமதி தொடர்பான பிரச்சினைகள் குறித்து விவாதிக்க எஃகு அமைச்சகம் அக்டோபர் 27, 2025 அன்று புதுதில்லியில் உள்ள உத்யோக் பவனில் திறந்த மன்றத்தை நடத்துகிறது. இறக்குமதி தொடர்பான தங்கள் பிரச்சனைகளை திறந்த மன்றத்தில் சம்பந்தப்பட்டவர்கள் முன்வைக்கலாம். திறந்த மன்றத்தில் பங்கேற்க உறுதிப்படுத்தப்பட்ட நேரத்தைப் பெறுவதற்கு tech-steel[at]nic[dot]in-க்கு மின்னஞ்சல்களை அனுப்பலாம்.
மின்னஞ்சலை அனுப்பும்போது, பின்வரும் தகவல்களைச் சேர்க்கலாம்:
- நிறுவனம்/சங்கத்தின் பெயர்
- பிரச்சினை
- பங்கேற்பாளரின் பெயர் மற்றும் பதவி
- எஸ்ஐஎம்எஸ்/என்ஓசி விண்ணப்பம் ஏதேனும் இருந்தால் அதற்கான குறிப்பு
- தொழில் மற்றும் தயாரிப்பு வகை - ஆட்டோ/ ஏரோஸ்பேஸ்/ டெலிகாம்/பாதுகாப்பு போன்றவை.
- பிரச்சனைகளின் விவரம் (அதிகபட்சம் 50 வார்த்தைகளில்)
- நோடல் நபரின் தொடர்பு விவரங்கள் (மொபைல் எண் மற்றும் மின்னஞ்சல்)
திறந்தவெளி நிகழ்வு மதியம் 12 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறும், மேலும் குறிப்பிட்ட நேரங்கள் மின்னஞ்சல் மூலம் குறிப்பிடப்படும். பரந்த பங்கேற்பை உறுதி செய்வதற்காக ஒரு நிறுவனத்திற்கு ஒரு பிரதிநிதி மட்டுமே அனுமதிக்கப்படுவார்.
எஃகு இறக்குமதி தொடர்பான சிக்கல்களைக் கொண்ட எந்தவொரு நிறுவனம் அல்லது சங்கமும், 2025 அக்டோபர் 24 ஆம் தேதி காலை 11 மணிக்குள் உறுதிப்படுத்தப்பட்ட நேர இடைவெளிகளைப் பெற மேற்கண்ட மின்னஞ்சலில் தங்கள் கோரிக்கையை அனுப்பலாம் என்று அறிவுறுத்தப்படுகிறது.
***
(Release ID: 2181441)
SS/PKV/RJ
(Release ID: 2181559)
Visitor Counter : 9