வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
2025 செப்டம்பர் மாதத்திற்கான எட்டு முக்கிய தொழில்களின் குறியீடு (அடிப்படை ஆண்டு 2011-12=100)
Posted On:
21 OCT 2025 5:00PM by PIB Chennai
எட்டு முக்கிய தொழில்களின் ஒருங்கிணைந்த குறியீடு, செப்டம்பர் 2024-ல் இருந்த குறியீட்டுடன் ஒப்பிடுகையில் , செப்டம்பர் 2025-ல் 3.0 சதவீதம் (தற்காலிகமாக) அதிகரித்துள்ளது. எஃகு, சிமென்ட், மின்சாரம், உரம் ஆகியவற்றின் உற்பத்தி செப்டம்பர் 2025-ல் நேர்மறையான வளர்ச்சியைப் பதிவு செய்தது.
இந்தக் குறியீடு, நிலக்கரி, கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, சுத்திகரிக்கப்பட்ட பொருட்கள், உரங்கள், எஃகு, சிமென்ட், மின்சாரம் ஆகிய எட்டு முக்கிய தொழில்களில் உற்பத்தியின் ஒருங்கிணைந்த மற்றும் தனிப்பட்ட செயல்திறனை அளவிடுகிறது. தொழில்துறை உற்பத்தி குறியீட்டில் சேர்க்கப்பட்டுள்ள பொருட்களின் எடையில் எட்டு முக்கிய தொழில்கள் 40.27 சதவீதத்தைக் கொண்டுள்ளன.
ஆகஸ்ட் 2025-க்கான எட்டு முக்கிய தொழில்களின் குறியீட்டின் இறுதி வளர்ச்சி விகிதம் 6.5 சதவீதமாகக் காணப்பட்டது. 2025-26 ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான எட்டு முக்கிய தொழில்களின் குறியீட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சி விகிதம் கடந்த ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போது 2.9 சதவீதமாக (தற்காலிகம்) உள்ளது.
நிலக்கரி உற்பத்தி (அடிப்படை: 10.33 சதவீதம்) 2024 செப்டம்பரை விட 1.2 சதவீதம் குறைந்துள்ளது. அதன் ஒட்டுமொத்த குறியீடு 2025-26 ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்தை விட 0.7 சதவீதம் குறைந்துள்ளது.
கச்சா எண்ணெய் உற்பத்தி (அடிப்படை: 8.98 சதவீதம்) 2024 செப்டம்பரை விட 1.3 சதவீதம் குறைந்துள்ளது. அதன் ஒட்டுமொத்த குறியீடு 2025-26 ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்தை விட 1.1 சதவீதம் குறைந்துள்ளது.
இயற்கை எரிவாயு உற்பத்தி (அடிப்படை: 6.88 சதவீதம்) 2024 செப்டம்பரை விட 3.8 சதவீதம் குறைந்துள்ளது. அதன் ஒட்டுமொத்த குறியீடு 2025-26 ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்தை விட 2.9 சதவீதம் குறைந்துள்ளது.
பெட்ரோலிய சுத்திகரிப்புப் பொருட்கள் உற்பத்தி (அடிப்படை: 28.04 சதவீதம்) 2024 செப்டம்பர் மாதத்தை விட 2025 செப்டம்பர் மாதத்தில் 3.7 சதவீதம் குறைந்துள்ளது. அதன் ஒட்டுமொத்த குறியீடு 2025-26 ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை முந்தைய ஆண்டின் இதே காலத்தை விட 0.3 சதவீதம் குறைந்துள்ளது.
உரங்கள் உற்பத்தி (அடிப்படை: 2.63 சதவீதம்) 2024 செப்டம்பர் மாதத்தை விட 1.6 சதவீதம் அதிகரித்துள்ளது. ஏப்ரல் முதல் செப்டம்பர் 2025-26 வரையிலான காலத்தில் அதன் ஒட்டுமொத்த குறியீடு முந்தைய ஆண்டின் இதே காலத்தை விட 0.4 சதவீதம் குறைந்துள்ளது.
எஃகு உற்பத்தி (அடிப்படை: 17.92 சதவீதம்) 2024 செப்டம்பர் மாதத்தை விட 14.1 சதவீதம் அதிகரித்துள்ளது. ஏப்ரல் முதல் செப்டம்பர் 2025-26 வரையிலான காலத்தில் அதன் ஒட்டுமொத்த குறியீடு முந்தைய ஆண்டின் இதே காலத்தை விட 11.0 சதவீதம் அதிகரித்துள்ளது.
சிமென்ட் உற்பத்தி (அடிப்படை: 5.37 சதவீதம்) 2024 செப்டம்பர் மாதத்தை விட 5.3 சதவீதம் அதிகரித்துள்ளது. ஏப்ரல் முதல் செப்டம்பர் 2025-26 வரையிலான காலத்தில் அதன் ஒட்டுமொத்த குறியீடு முந்தைய ஆண்டின் இதே காலத்தை விட 7.7 சதவீதம் அதிகரித்துள்ளது.
மின்சார உற்பத்தி (அடிப்படை: 19.85 சதவீதம்) 2024 செப்டம்பர் மாதத்தை விட 2025 செப்டம்பர் மாதத்தில் 2.1 சதவீதம் அதிகரித்துள்ளது. அதன் ஒட்டுமொத்த குறியீடு 2025-26 ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை முந்தைய ஆண்டின் இதே காலத்தை விட 0.9 சதவீதம் அதிகரித்துள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2181272
****
SS/SMB/SH
(Release ID: 2181316)
Visitor Counter : 7