அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
azadi ka amrit mahotsav

இந்திய அறிவுசார் முறையின் தகவல் பரவல் குறித்து ஆசிரியர்களுக்கான தேசிய திறன் மேம்பாட்டு பயிலரங்கு

Posted On: 21 OCT 2025 11:47AM by PIB Chennai

இந்திய அறிவுசார் முறையின் தகவல் பரவல் குறித்து ஆசிரியர்களுக்கான தேசிய திறன் மேம்பாட்டு பயிலரங்கிற்கு சிஎஸ்ஐஆர் – தேசிய அறிவியல் தொடர்பு மற்றும் கொள்கை ஆராய்ச்சி நிறுவனம் ஏற்பாடு செய்திருந்தது. ரோட்டக்கில் உள்ள மகரிஷி தயானந்த் பல்கலைக்கழகத்தில் 2025 அக்டோபர் 16 அன்று நடைபெற்ற இப்பயிலரங்கில் 75 பல்வேறு கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர்.

மகரிஷி தயானந்த் பல்கலைக்கழகத்தின் டாக்டர் சுரேந்தர் யாதவ் தொடக்கவுரையாற்றினார். அதைத் தொடர்ந்து காணொலிக் காட்சி வாயிலாக சிஎஸ்ஐஆர் - தேசிய அறிவியல் தொடர்பு மற்றும் கொள்கை ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநர் டாக்டர் கீதா வாணி ராயசம் பங்கேற்று உரையாற்றினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2181105  

***

SS/IR/KPG/SG

 


(Release ID: 2181216) Visitor Counter : 6