சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம்
தமிழ்நாடு உள்பட நான்கு மாநிலங்களில் நோட்டரிகளின் எண்ணிக்கையை அரசு அதிகரித்துள்ளது
Posted On:
19 OCT 2025 9:50AM by PIB Chennai
மத்திய சட்டம் மற்றும் நீதி அமைச்சகத்தின் சட்ட விவகாரத் துறை, அக்டோபர் 17 தேதியிட்ட அறிவிக்கை மூலம் நோட்டரிகள் (திருத்தம்) விதிகள், 2025- ஐ அறிவித்துள்ளது. மேலும் நோட்டரிகள் சட்டம், 1952- ஆல் வழங்கப்பட்ட அதிகாரங்களின் கீழ் நோட்டரிகள் விதிகள், 1956- ஐ மேலும் திருத்துகிறது.
இந்தத் திருத்தம் தமிழ்நாடு, குஜராத், ராஜஸ்தான், நாகாலாந்து ஆகிய மாநில அரசுகளால் நியமிக்கப்படக்கூடிய அதிகபட்ச நோட்டரிகளின் (சான்றுறுதி அலுவலர்கள்) எண்ணிக்கையை அதிகரித்துள்ளது:
இந்த விதிகள் நோட்டரிகள் (திருத்தம்) விதிகள், 2025 என்று அழைக்கப்படலாம்.
அவை அதிகாரப்பூர்வ அரசிதழில் வெளியிடப்பட்ட தேதியில் அமலுக்கு வரும்.
நோட்டரிகள் விதிகள், 1956-ன் அட்டவணையில்,—
குஜராத் மாநிலத்தில் நோட்டரிகளின் எண்ணிக்கை 2900-க்குப் பதிலாக 6000 ஆகவும், தமிழ்நாட்டில் இந்த எண்ணிக்கை 2500-க்குப் பதிலாக, 3500 ஆகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
ராஜஸ்தானுக்கு 2000-க்குப் பதிலாக,3000 ஆகவும், நாகாலாந்தில் 200 என்பது 400 ஆகவும் மாற்றப்படுகிறது.
மக்கள்தொகை வளர்ச்சி, மாவட்டங்கள்/தாலுகாக்களின் எண்ணிக்கை மற்றும் நோட்டரி சேவைகளுக்கான தொடர்புடைய தேவை ஆகியவற்றை அங்கீகரித்து, அந்தந்த மாநில அரசுகளிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கைகளுக்கு ஏற்ப இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
***
AD/PKV/SH
(Release ID: 2180840)
Visitor Counter : 26