தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

செப்டம்பர் மாதத்துக்கான வேளாண் மற்றும் கிராமப்புற தொழிலாளர்களுக்கான அகில இந்திய நுகர்வோர் விலைக் குறியீடு

Posted On: 18 OCT 2025 9:37AM by PIB Chennai

தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் தொழிலாளர் பணியகம், செப்டம்பர் 2025 மாதத்திற்கான  விவசாயத் தொழிலாளர்கள் மற்றும் கிராமப்புறத் தொழிலாளர்களுக்கான  நுகர்வோர் விலைக் குறியீட்டு எண்களை வெளியிட்டுள்ளது. இந்தக் குறியீடுகள் 34 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் உள்ள 787 மாதிரி கிராமங்களின் தொகுப்பிலிருந்து சேகரிக்கப்பட்ட தரவுகளை அடிப்படையாகக் கொண்டவை.

2025 செப்டம்பர்  மாதத்தில், விவசாயத் தொழிலாளர்களுக்கான அகில இந்திய நுகர்வோர் விலைக் குறியீடு (அடிப்படை: 2019=100) 0.11 புள்ளிகள் குறைந்து 136.23 ஆகவும், கிராமப்புறத் தொழிலாளர்களுக்கான குறியீடு 0.18 புள்ளிகள் குறைந்து 136.42 ஆகவும் இருந்தது. செப்டம்பரில் உணவு குறியீடு விவசாயத் தொழிலாளர்களுக்கு  0.47 புள்ளிகளும், கிராமப்புறத் தொழிலாளர்களுக்கு  0.58 புள்ளிகளும் குறைந்துள்ளது.

மேலும் விரிவான தகவல்களுக்கு இந்த ஆங்கிலச்செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2180631

 

******

AD/PKV/SG

 

 

 


(Release ID: 2180725) Visitor Counter : 8