வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
வர்த்தகத்தில் சமநிலை மற்றும் பரஸ்பரம் பயனளிக்கும் வகையில் போட்டியில்லா நாடுகளுடன் கூட்டணியை உருவாக்குவதில் அரசு கவனம் செலுத்தி வருகிறது : மத்திய அமைச்சர் திரு பியூஷ் கோயல்
Posted On:
17 OCT 2025 3:52PM by PIB Chennai
அண்மை ஆண்டுகளில் நாட்டின் வர்த்தகம் குறிப்பிடத்தக்க அளவில் வளர்ச்சிக் கண்டு வரும் நிலையில், வலிமையான நிலையை அடைவது குறித்த பேச்சுவார்த்தைகளிலிருந்து நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கான நம்பகத்தன்மை மற்றும் சர்வதேச அளவில் தடையற்ற வர்த்தக ஏற்பாடுகளை மேற்கொள்ளும் நடவடிக்கைகளில் கவனம் செலுத்தப்பட்டு வருவதாக மத்திய வர்த்தகத்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். புதுதில்லியில் நடைபெற்ற அசோசம் அமைப்பின் 105-வது வருடாந்தர பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர் இந்தியாவுடன் போட்டியிடாத நாடுகளுடன் வர்த்தக உறவுகளை மேம்படுத்துவதற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார். இரு நாடுகளுக்கும் பரபஸ்பரம் பயனளிக்கும் வகையிலும் வர்த்தகத்தில் சமநிலையை பராமரிக்கும் வகையிலும் பல்வேறு நாடுகளுடன் வர்த்தக கூட்டமைப்பு உறுதி செய்யப்படும் என்று அவர் தெரிவித்தார்.
இந்தியாவின் இந்த உத்திசார் அணுகுமுறை உள்நாட்டு தொழில் நிறுவனங்களைப் பாதுகாப்பதுடன் ஏற்றுமதியை ஊக்குவிக்கவம், முதலீடுகளுக்கான வாய்ப்புகளை உருவாக்கவும், தொழில்நுட்ப ஒத்துழைப்பை மேம்படுத்தும் வகையிலும் பரஸ்பரம் பயனளிக்கும் விதத்தில் வர்த்தக ஒப்பந்தங்கள் மேற்கொள்வதில் உறுதியுடன் உள்ளதாகத் தெரிவித்தார்.
நாட்டின் அந்நியச்செலாவணிக் கையிருப்பு தொடர்ந்து 700 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உள்ளதென்றும் இது இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கான வலுவான அடித்தளத்தை பிரதிபலிப்பதாக உள்ளதென்று திரு பியூஷ் கோயல் கூறினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2180326
***
SS/SV/KPG/SH
(Release ID: 2180543)
Visitor Counter : 5