PIB Headquarters
சிமெண்ட் முதல் கைத்தறி வரை அனைத்துத் துறைகளிலும் சத்தீஷ்கர் மாநிலத்தின் வளர்ச்சிக்கு உத்வேகம் அளிக்கும் ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள்
Posted On:
17 OCT 2025 1:55PM by PIB Chennai
நாட்டின் மையப் பகுதியில் அமைந்திருக்கும் சத்தீஷ்கர் மாநிலம் 2000-மாவது ஆண்டுக்கு பிறகு மத்தியப்பிரதேச மாநிலத்திலிருந்து பிரிக்கப்பட்டு தனிமாநிலமாக உருவானது. நாட்டின் 9-வது பெரிய மாநிலமாகத் திகழும் இம்மாநிலத்தில் 25 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். காடுகள் மற்றும் இயற்கை வளங்கள் நிறைந்த மாநிலமான சத்தீஷ்கரில் பழங்குடியின மக்களின் பாரம்பரியம், கலாச்சார மேன்மை மற்றும் தொழில் நிறுவனங்களின் வலிமை குறித்து அனைவரும் அறிந்ததே. கலை மற்றும் கைவினைப் பொருட்களுக்கான பாரம்பரிய அடையாளத்துடன் கூடிய இந்த மாநிலத்தின் பஸ்தரின் கலைநயம் மிக்க உலோக மணி மற்றும் ராய்கரின் மூங்கில் ஓவியங்கள், கைகளால் நெய்யப்பட்ட கோசா பட்டுத்துணிகள், இம்மாநிலத்தின் பாரம்பரிய திறன் மற்றும் நிலைத்தன்மையை பறைசாற்றுவதாக உள்ளது.
அண்மையில் மேற்கொள்ளப்பட்ட சரக்கு மற்றும் சேவை வரி சீர்திருத்த நடவடிக்கைகள் சத்தீஷ்கர் மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு புதிய உத்வேகத்தை அளிப்பதாக உள்ளது. அத்தியாவசியப் பொருட்கள் முதல் பாரம்பரிய துறைகள் சார்ந்த பொருட்களுக்கான வரி விகிதங்கள் குறைக்கப்பட்டதுடன் இந்த சீர்திருத்த நடவடிக்கைகள் அவற்றுக்கான மூலப்பொருள் கொள்முதல் விலைகளையும் வெகுவாகக் குறைத்துள்ளது. மேலும், நுகர்வோரின் தேவையை சீரான வகையில் மேம்படுத்தியதுடன் தேசிய மற்றும் சர்வதேச சந்தைகளில் போட்டித்தன்மையுடன் கூடிய உள்ளூர் தயாரிப்புகளுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் அமைந்துள்ளது. கைத்தறி, கைவினைப் பொருள்கள், பால் பொருள்கள் உள்ளிட்ட முக்கியத்துவம் வாய்ந்த துறைகளில் சரக்கு மற்றும் சேவை வரி விகிதம் 5 சதவீதமாகக் குறைக்கப்பட்டதன் மூலம் சிறு தயாரிப்பாளர்களின் சுமை வெகுவாகக் குறைந்துள்ளது. தொழில்துறையின் கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்கும், ஊரக பகுதிகளில் தொழில் முனைவை ஊக்குவிப்பதற்கும் மாநிலத்தின் வளர்ச்சியை உள்ளடக்கிய மேம்பாட்டு நடவடிக்கைகளுக்கும் அம்மாநில அரசு உயர் முன்னுரிமை அளித்து வருகிறது.
சத்தீஷ்கரில் சிமெண்ட் மற்றும் கட்டுமானத் தொழிலுக்குத் தேவையான வலுவான சந்தையாக கோர்பா, ராய்கர், பிலாஸ்பூர், ராய்ப்பூர், புதிய ராய்ப்பூர் பகுதிகளில் மேம்பாட்டுத் திட்டங்கள் நகரமயமாக்கல் பணிகள் உத்வேகம் பெற்றுள்ளது. கட்டுமானத் துறை மூலம் கிடைக்கும் வரி வருவாய் மற்றும் அது சார்ந்த தொழிலுக்கு கிடைக்கும் ஆதரவு காரணமாக அம்மாநிலத்தின் வளர்ச்சிக்கு இத்துறை பெரும் பங்கு வகிக்கிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2180263
***
SS/SV/KPG/SH
(Release ID: 2180490)
Visitor Counter : 8