ஆயுஷ்
ஆயுஷ் ராஜீய உறவுகள் ஆர்க்டிக் பகுதியை சென்றடைந்துள்ளது: ரெய்க்யவிக் மாநாட்டில் இந்திய சுகாதார வல்லுநர்கள் பங்கேற்பு
Posted On:
17 OCT 2025 12:08PM by PIB Chennai
ஐஸ்லாந்தின் ரெய்க்யவிக்கில் நடைபெறும் ஆர்க்டிக் பகுதி தொடர்பான மாநாட்டில் இந்திய தூதுக்குழுவின் ஒரு பகுதியாக ஆயுர்வேத அறிவியல் ஆராய்ச்சிக்கான மத்திய கவுன்சில் தலைமை இயக்குநர் பேராசிரியர் (வைத்திய) ரபி நாராயண் ஆச்சார்யா, ஆயுஷ் அமைச்சகத்தின் இணை ஆலோசகர் (ஓமியோபதி) டாக்டர் ஸ்ரீனிவாஸ் ராவ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
“ஆர்க்டிக் பகுதியில் உலகளாவிய தெற்கின் பங்களிப்பும் முக்கியத்துவமும்” என்பது பற்றிய தொடக்க அமர்வில் உரையாற்றிய பேராசிரியர் ஆச்சார்யா, விரிவான ஆர்க்டிக் கொள்கையின் கீழ் இந்தியாவின் ஆக்கப்பூர்வ பங்களிப்பை எடுத்துரைத்தார். உலகளாவிய சுகாதார பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதில் பாரம்பரிய மருத்துவமுறைகளின் அதிகரித்து வரும் பொருத்தப்பாட்டினை வலியுறுத்தினார். ஆர்க்டிக் போன்ற பகுதிகளில் கூட ஆரோக்கியத்தை பேணுவதற்கு ஆயுஷின் தலையீடுகளை அவர் எடுத்துரைத்தார்.
இந்த அமர்வுக்கு இந்திய அரசு ஏற்பாடு செய்திருந்தது. இதில் ரியர் அட்மிரல் டி வி என் பிரசன்னா, விஞ்ஞானி மனிஷ் திவாரி, ஐக்கிய அரபு அமீரகத்தின் வாசிம் செய்த் உள்ளிட்டோர் உரையாற்றினர்.
பாரம்பரிய அறிவியல் முறைகள், ஆர்க்டிக் ஆராய்ச்சி இடையேயான விரிவான ஒத்துழைப்புக்குரிய தொலைநோக்கு பார்வையை பேராசிரியர் ஆச்சார்யா கோடிட்டு காட்டினார். பாரம்பரிய மற்றும் நவீன மருந்துகளை இணைக்கின்ற வலுவான அறிவியல் ஆதாரங்களை வெளியிடுவதன் அவசியத்தை அவர் வலியுறுத்தினார்.
இந்த மாநாட்டில் ஆயுஷ் அமைச்சகத்தின் பங்கேற்ப்பு என்பது ஆயுஷ் அடிப்படையிலான ஆதாரம், புத்தாக்கம், ராஜீய உறவு ஆகியவற்றை உலகளாவிய நீடிக்கவல்ல சுகாதார உரையாடல்களுடன் ஒருங்கிணைக்கும் இந்தியாவின் உறுதிப்பாட்டை எடுத்துரைப்பதாக உள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும். https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2180220
***
SS/SMB/AS/KR
(Release ID: 2180374)
Visitor Counter : 10