புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

இந்திய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மேம்பாட்டு முகமையின் இரண்டாம் காலாண்டின் முன்னேற்றத்தின் மூலம் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியில் இந்தியாவின் வேகம் வலுப்பெற்றது - மத்திய அமைச்சர் பிரலாத் ஜோஷி

Posted On: 14 OCT 2025 12:53PM by PIB Chennai

மத்திய புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறை அமைச்சர் திரு பிரலாத் ஜோஷி அவர்கள், இந்திய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மேம்பாட்டு முகமை, நிதியாண்டு 2025-26-ன் இரண்டாவது காலாண்டில் ஈர்க்கக்கூடிய செயல்திறனை வெளிப்படுத்தியதன் மூலம் இந்தியாவின் சுத்தமான எரிசக்தி பயணத்திற்கு ஒரு வலுவான உந்துதல் கிடைத்துள்ளதாக எடுத்துரைத்தார். இந்திய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மேம்பாட்டு முகமை, புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறையில் நிலையான வளர்ச்சி மற்றும் தன்னம்பிக்கையை வளர்த்து, நாட்டின் எதிர்காலத்திற்கு ஒளியூட்டி வருகிறது. ஒரு பசுமையான மற்றும் பிரகாசமான எதிர்காலத்தை நோக்கிய கூட்டு முயற்சிகளை உற்சாகத்துடனும் நோக்கத்துடனும் இந்திய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மேம்பாட்டு முகமை ஊக்குவிக்கிறது என்றும் அவர் கூறினார்.

இந்திய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மேம்பாட்டு முகமை செப்டம்பர் 30, 2025 உடன் முடிவடைந்த காலாண்டு மற்றும் அரையாண்டிற்கான தணிக்கை செய்யப்பட்ட நிதி முடிவுகளை இன்று அறிவித்தது. இது இந்திய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மேம்பாட்டு முகமையின் உறுதியான வளர்ச்சி மற்றும் செயல்பாட்டுத் திறனின் தொடர்ச்சியை வலுவாகக் காட்டுகிறது. இன்று நடைபெற்ற இயக்குநர் குழு கூட்டத்தில், தணிக்கை செய்யப்பட்ட நிதி முடிவுகளுக்கு ஒப்புதல் அளித்தது. முக்கிய நிதி அளவுருக்களில் இந்திய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மேம்பாட்டு முகமை ஆண்டுக்கு ஆண்டு குறிப்பிடத்தக்க வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது என்று முடிவுகள் தெளிவாகக் காட்டுகின்றன. நிறுவனத்தின் கடன் புத்தகத்தின் விரிவாக்கம், நிகர மதிப்பு அதிகரிப்பு மற்றும் தொடர்ச்சியான லாபம் ஈட்டுதல் ஆகியவை இந்தியாவின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி இலக்குகளை நிறைவேற்றுவதற்கான அதன் நிலையான கவனம் மற்றும் அர்ப்பணிப்பை அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன.


இரண்டாவது காலாண்டின் செயல்பாடு குறித்து கருத்து தெரிவித்த இந்திய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மேம்பாட்டு முகமையின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் திரு பிரதீப் குமார் தாஸ், "எல்லா காலாண்டுகளிலும் இந்திய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மேம்பாட்டு முகமை-யின் தொடர்ச்சியான வளர்ச்சி எங்கள் நிலையான கவனம் மற்றும் செயல்படுத்தும் திறனை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. எங்களின் வளர்ந்து வரும் கடன் புத்தகம் மற்றும் வலுவான நிதி நிலை, எங்கள் பங்குதாரர்கள் எங்கள் மீது வைத்திருக்கும் நம்பிக்கைக்கு சான்றாகும். மேலும், இந்தியாவின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி சூழல் அமைப்பில் ஒரு முக்கிய ஊக்குவிப்பாளராக எங்களின் பங்கை இது வெளிப்படுத்துகிறது” என்று தெரிவித்தார்.

திரு பிரதீப் குமார் தாஸ், இந்திய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மேம்பாட்டு முகமையின் முயற்சிகளைப் பாராட்டினார். அத்துடன், மத்திய புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறை அமைச்சர், இணை அமைச்சர், புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறைச் செயலாளர், அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள் மற்றும் இயக்குநர் குழு ஆகியோரின் தொடர்ச்சியான ஆதரவுக்கு தனது நன்றியைத் தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2178801

 

***

(Release ID: 2178801)

SS/EA


(Release ID: 2180300) Visitor Counter : 8