எரிசக்தி அமைச்சகம்
இந்தியா-ஆஸ்திரேலியா இடையே எரிசக்தி ஒத்துழைப்பு குறித்த பேச்சுவார்த்தை
Posted On:
16 OCT 2025 4:58PM by PIB Chennai
இந்தியா-ஆஸ்திரேலியா இடையே எரிசக்தி ஒத்துழைப்பு குறித்த பேச்சுவார்த்தை புதுதில்லியில் இன்று (16.10.2025) நடைபெற்றது. இருநாடுகளுக்கும் இடையே எரிசக்தி ஒத்துழைப்பு குறித்த ஐந்தாவது ஆலோசனை கூட்டம் மத்திய மின்சாரம் மற்றும் வீட்டுவசதித்துறை அமைச்சர் திரு மனோகர் லால் மற்றும் ஆஸ்திரேலியாவின் பருவநிலை மாற்றம் மற்றும் எரிசக்தித்துறை அமைச்சர் திரு கிரிஷ் போவன் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் இந்தியா சார்பில் மத்திய மின்சார அமைச்சகம், புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம், பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம், சுரங்க அமைச்சகம், நிலக்கரி அமைச்சகம், ஆகியவற்றின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். இந்தக் கூட்டத்தில் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. மேலும் இத்துறையில் எதிர்காலத்தில் இணைந்து செயல்படும் வகையில் கூட்டு பணிக்குழுவை அமைப்பது குறித்தும் இதில் விவாதிக்கப்பட்டது.
நிகர பூஜ்ஜிய கார்பன் வெளியேற்றம் தொடர்பான சர்வதேச நிலைப்பாட்டிற்கு ஏற்ப மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் எரிசக்தித்துறையில் ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்தும் தொழில்நுட்ப பயன்பாடு பசுமை ஹைட்ரஜனின் பங்களிப்பு, எரிசக்தி ஆதாரத்தில் நம்பகத்தன்மையுடன் கூடிய கூட்டு வர்த்தக நடவடிக்கை, பாதுகாப்பு, விநியோகச்சங்கிலி, பன்முகத்தன்மை ஆகியவற்றை அங்கீகரிக்கப்பட வேண்டியதன் அவசியம் குறித்தும் விவாதிக்கப்பட்டது.
இந்தியா-பசிபிக் பிராந்தியத்தில் பாதுகாப்பான, விரைவான மற்றும் நீடித்த எரிசக்தி அமைப்பை நிறுவுவதில் இந்தியா- ஆஸ்திரேலியா நாடுகளின் கூட்டு நடவடிக்கைகள் குறித்தும் இவ்விருநாடுகளின் அமைச்சர்கள் விரிவாக விவாதித்தனர்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2179919
***
AD/SV/AG/SH
(Release ID: 2180119)
Visitor Counter : 8