தேசிய மனித உரிமைகள் ஆணையம்
azadi ka amrit mahotsav

மனித உரிமைகள் சட்டப்பூர்வ கடமையாக மட்டுமின்றி ஆன்மிகம் மற்றும் நீதிக்கான பண்பாகவும் கருதப்பட வேண்டும்: திரு ராம்நாத் கோவிந்த்

प्रविष्टि तिथि: 16 OCT 2025 4:45PM by PIB Chennai

தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் 32-வது நிறுவன தினத்தையொட்டி சிறைவாசிகளுக்கான மனித உரிமைகள் குறித்த தேசிய கருத்தரங்கு புதுதில்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் முதன்மை விருந்தினராக பங்கேற்று உரையாற்றிய முன்னாள் குடியரசுத்தலைவர் திரு ராம்நாத் கோவிந்த், நீண்ட காலத்திற்கு முன்பு நவீன காலத்திற்கான மனித உரிமைகள் குறித்து பேசப்பட்டு வந்தது என்றும் நமது முனிவர்கள் மற்றும் வேதங்கள் தர்மத்தின் மாண்பை போற்றும் வகையிலும் கருணை மற்றும் நீதி ஆகியவற்றை உறுதிசெய்யும் வகையில் கடமையாற்ற வேண்டியதன் அவசியம் குறித்தும் வலியுறுத்தி வந்துள்ளனர். இதுபோன்ற போதனைகள் இன்றும் நேர்மையாக அடித்தளம் அமைத்து நம்மை வழித்துவதாக அவர் கூறினார். மனித உரிமைகளை காப்பது சட்டப்பூர்வ கடமையாக கருதுவது மட்டுமின்றி ஆன்மிக நீதிக்குரிய பண்பாகவும், இந்திய வாழ்வியல் முறையில் ஒருங்கிணைந்த அம்சமாகவும் கருதப்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

மனித உரிமைகள் குறித்த விரிவான கட்டமைப்புகளை இந்தியா கொண்டுள்ளதாக கூறிய அவர், 1993-ம் ஆண்டு தேசிய மனித உரிமைகள் ஆணையம் தொடங்கப்பட்டதாகவும் தெரிவித்தார். உலகளவில் இந்த ஆணையம் மிகவும் போற்றத்தக்க வகையில் செயல்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.

இந்த ஆணையத்தின் 32-வது நிறுவன தினம் என்பது வெறும் கொண்டாட்டமாக மட்டுமின்றி நீதி, சுதந்திரம், சமத்துவம் மற்றும் சகோதரத்துவத்தின் ஒருங்கிணைந்த உறுதிப்பாடாகவும் இருக்கிறது என்று அவர் கூறினார்.  சிறந்த நிர்வாக நடைமுறையாகவும், விளிம்பு நிலை மக்களின் உரிமைகளுக்கான குரலாகவும், அதன் விசாரணைகள், ஆலோசனைகள், வாதங்கள் போன்றவை வாயிலாக மனித உரிமைகளை இந்த ஆணையம் நிலைநிறுத்தி வருவதாக தெரிவித்துள்ளார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2179915

 

***

AD/SV/AG/SH


(रिलीज़ आईडी: 2180115) आगंतुक पटल : 20
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi