ஊரக வளர்ச்சி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

நக்சல் தீவிரவாதம் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் சாலை கட்டமைப்பு பணிகள் தீவிரவாதத்தை அகற்றுவதில் முக்கிய பங்கு வகிக்கிறது: மத்திய அமைச்சர் திரு சிவ்ராஜ் சிங் சௌகான்

प्रविष्टि तिथि: 16 OCT 2025 3:54PM by PIB Chennai

வடகிழக்கு மாநிலங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சிப் பணிகளை துரிதப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மத்திய ஊரக மேம்பாடு மற்றும் வேளாண் துறை அமைச்சர் திரு சிவ்ராஜ் சிங் சௌகான் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

புதுதில்லியில் கிரிஷி பவனில் அமைச்சர் தலைமையில் நடைபெற்ற உயர்நிலைக் கூட்டத்தில் பிரதமரின் கிராமச்சாலைகள் திட்டத்தின் பணிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. மேலும் வருங்காலத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய செயல் திட்டங்கள் குறித்து அமைச்சர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

மலைப்பாங்கான பகுதிகள் மற்றும் பேரிடர் பாதித்த பகுதிகளில் நிலவும் இயற்கை சூழல் காரணமாக பணிகளில் காலதாமதம் ஏற்பட்டுள்ளதாகவும், பிற பகுதிகளில் பணிகள் விரைவாக நடைபெற்று வருவதாகவும் அதிகாரிகள் எடுத்துரைத்தனர்.

நாட்டின் வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் சட்டீஸ்கர் மாநிலம் உட்பட நக்சல் தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு அமைச்சர் அறிவுறுத்தினார்.

பிரதமரின் கிராமப்புறச்சாலை மேம்பாட்டுத் திட்டம், ஊரகப்பகுதிகளில் பெரும் மாற்றங்களை உருவாக்கியுள்ளதாக அவர் கூறினார். இத்திட்டம் தொடங்கப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் கிராமப்புற பகுதிகளின் நிலை குறிப்பிடத்தக்க அளவில் மேம்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2179877  

***

SS/SV/AG/SH


(रिलीज़ आईडी: 2180105) आगंतुक पटल : 12
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Bengali-TR , Gujarati , Telugu , Kannada