சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
மத்தியப் பிரதேசம் போபாலில் பிரதமரின் மக்கள் ஆரோக்கிய திட்டம், ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் இயக்கம் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெறுகிறது
இடுகை இடப்பட்ட நாள்:
16 OCT 2025 1:11PM by PIB Chennai
ஆயுஷ்மான் பாரத் பிரதமரின் மக்கள் ஆரோக்கிய திட்டம், ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் இயக்கம் ஆகிய நாட்டின் இரண்டு முன்னோடி சுகாதார முன் முயற்சிகளுக்கான எதிர்கால திட்டமிடல் மற்றும் செயல்பாட்டை மதிப்பீடு செய்வதற்கான முக்கிய நிகழ்வாக தேசிய சுகாதார ஆணையம், தேசிய அளவிலான இரண்டு நாள் ஆய்வுக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ளது.
மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் 2025 அக்டோபர் 15,16 ஆகிய நாட்களில் இது நடைபெறுகிறது. டிஜிட்டல் சுகாதார நலன் மாற்றம் குறித்த விரிவான உரையாடலுக்காக நாடு முழுவதும் உள்ள நிபுணர்கள், பிரதிநிதிகள், உயர் அதிகாரிகள், தேசிய சுகாதார ஆணைய தலைமைச் செயல் அதிகாரி டாக்டர் சுனில் குமார் பர்ன்வால், மத்தியப் பிரதேச தலைமைச் செயலாளர் திரு அனுராக் ஜெயின் உள்ளிட்டோர் இதில் கலந்துகொண்டுள்ளனர்.
பிரதமரின் மக்கள் ஆரோக்கிய திட்டம் 2.0, ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் இயக்கம் 2.0 ஆகியவற்றுக்கான திட்டமிடலுக்கு சிறந்த நடைமுறைகளை மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் பகிர்ந்து கொள்வதும், திட்ட அமலாக்கம் குறித்து மதிப்பீடு செய்வதையும் இந்த ஆய்வு நோக்கமாக கொண்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2179797
***
SS/IR/AG/KR
(வெளியீட்டு அடையாள எண்: 2179995)
வருகையாளர் எண்ணிக்கை : 31