சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மத்திய சட்டம் மற்றும் நீதி அமைச்சகத்தின் மத்திய சட்ட விவகாரங்கள் துறை சிறப்புப் பிரச்சாரம் 5.0 - ஐ நடத்தியுள்ளது.

Posted On: 15 OCT 2025 9:22AM by PIB Chennai

மத்திய சட்டம் மற்றும் நீதி அமைச்சகத்தின் மத்திய சட்ட விவகாரங்கள்  துறையின் அனைத்து அலுவலகங்களிலும் சிறப்பு பிரச்சாரம் 5.0   2025  அக்டோபர் மாதம் முழுவதும் நடைபெறுகிறது. தூய்மையைக் கடைப்பிடிக்கும் அரசின் இலக்கை அடையும் நோக்கில், இந்த ஆண்டு மின்-கழிவுகளை அகற்றுதல், நிலுவையில் உள்ள ஆவணங்களை முடிவுக்குக் கொண்டுவருதல் மற்றும் விதிகள், நடைமுறைகளை எளிமையாக்குதல் ஆகியவற்றில் அதிக கவனம் செலுத்தப்படுகிறது.

புதுதில்லி சாஸ்திரி பவனில், மத்திய சட்டத்துறை செயலாளர் டாக்டர். அஞ்சு ரதி ராணா, மூத்த அதிகாரிகளுடன் சேர்ந்து, பிரச்சாரத்தின் முன்னேற்றத்தை ஆய்வு செய்தார். தூய்மையும் ஒழுங்கும் நிரந்தரமான நடைமுறைகள் என்றும், அவை திறனை மேம்படுத்துவதோடு நல்லாட்சியின் அடையாளமாகவும் விளங்குகின்றன என்றும் அவர் வலியுறுத்தினார்.

வளர்ச்சியடைந்த பாரதம் 2047 என்ற இலக்குடன் தூய்மை ஆழமாகப் பிணைந்துள்ளது. திரிபுரா உயர்நீதிமன்றத்தில், இந்திய துணை சொலிசிட்டர் ஜெனரல் பித்யுத் மஜும்தரின் முன் முயற்சியால் பழைய ஆவணங்கள் அகற்றப்பட்டது. பாட்னா உயர்நீதிமன்றத்திலும் இதுபோன்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2179198

 

(Release ID: 2179198)

SS/EA/SH


(Release ID: 2179826) Visitor Counter : 4