PIB Headquarters
ஜிஎஸ்டி சீர்திருத்தம் நாகாலாந்து மாநிலத்தில் அனைத்து துறைகளின் பொருளாதார வளர்ச்சிக்கும் உத்வேகம் அளிக்கிறது
प्रविष्टि तिथि:
15 OCT 2025 10:33AM by PIB Chennai
நாகாலாந்து மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சி அதன் இயற்கை வளங்களையும் வளர்ந்து வரும் தொழில் நிறுவனங்களையும் சார்ந்துள்ளது. விவசாயம், கைத்தறி, கைவினைப் பொருள்கள், சுற்றுலா போன்றவை அம்மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு ஆதாரமாக உள்ளது. அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஜிஎஸ்டி சீர்திருத்த நடவடிக்கைகள் காரணமாக மாநிலம் முழுவதும் உள்ள பல்வேறு தொழில் நிறுவனங்களுக்கான வரிவிகிதங்களில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் காரணமாக அம்மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சி வலுவடைந்து வருகிறது. ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள் மூலம் பல்வேறு பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான விலைகள் குறைவதுடன் உள்ளூர் தயாரிப்பாளர்கள் மற்றும் தொழில் நிறுவனங்களின் வருவாயும் மேம்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கைவினைக் கலைஞர்கள், விவசாயிகள் குறு, சிறு நிறுவனங்களுக்கு அதிகாரம் அளிக்கும் நடவடிக்கைகள் மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சிக்கான வாய்ப்புகளையும் இந்த சீர்திருத்தம் கொண்டு வருவதுடன் வர்த்தகம் மற்றும் சுற்றுலாத்துறையின் மையமாக நாகாலாந்து மாநிலத்தை உருவெடுக்கச் செய்யும்.
ஜவுளி மற்றும் கைத்தறி துறையில் புவிசார் குறியீட்டுடன் கூடிய சக்கேசங்க் சால்வைகள் அம்மாநில கைவினைக் கலைஞர்களின் பொருளாதார வளர்ச்சிக்கு பெரும் பங்கு வகிக்கிறது. கோஹிமா, பேக் (சக்கேசங்க்) மற்றும் திமாபூர் மாவட்டங்களில் சுற்றியுள்ள பகுதிகளில் இதற்கான உற்பத்தி தொகுதிகள் அமைந்துள்ளன. கோஹிமாவில் கைத்தறித் தொழிலுக்கான மையம் ஒன்று அண்மையில் அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. பெண்கள் தலைமையில் வீடுகளிலேயே கைத்தறி நெசவுத் தொழில் முதன்மையான தொழிலாக உள்ளதுடன் குழு நிறுவனங்களின் செயல்பாடுகளுக்கும் உதவுகிறது. 44,000 நெசவாளர்கள் இத்துறையில் ஈடுபட்டுள்ளனர். இம்மாநிலத்தில் கைத்தறி நெசவுத் தொழில் பாரம்பரியத் தொழிலாக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2179211
****
(Release ID: 2179211)
SS/SV/KPG/KR
(रिलीज़ आईडी: 2179768)
आगंतुक पटल : 12