தேசிய மனித உரிமைகள் ஆணையம்
ஜெய்ப்பூரில் உள்ள எஸ்.எம்.எஸ் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து தேசிய மனித உரிமைகள் ஆணையம் விசாரணை
प्रविष्टि तिथि:
14 OCT 2025 3:51PM by PIB Chennai
ஜெய்ப்பூரில் உள்ள அரசுக்கு சொந்தமான சவாய் மான் சிங் மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் ஏற்பட்ட தீ விபத்தில் எட்டு நோயாளிகள் இறந்ததாகவும், மேலும் மூவர் கடுமையாகக் காயமடைந்ததாகவும் வெளியான ஊடகச் செய்தியை தொடர்ந்து தேசிய மனித உரிமைகள் ஆணையம், தாமாக முன்வந்து விசாரணை மேற்கொள்கிறது.
தீ விபத்து ஏற்பட்ட போது, மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவு மற்றும் துணை தீவிர சிகிச்சைப் பிரிவில் மொத்தம் 18 நோயாளிகள் அனுமதிக்கப்பட்டிருந்ததாகவும், தீ மற்றும் விஷப் புகை காரணமாக மீட்புப் பணிகள் பாதிக்கப்பட்டதாகவும் ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த சம்பவம், நிர்வாகத்தின் தயார்நிலை மற்றும் சுகாதார அமைப்பு குறித்த கேள்விகளை எழுப்புகிறது என ஆணையம் தெரிவித்துள்ளது.
இச்சம்பவம் குறித்து, மாநிலத்தின் தலைமைச் செயலாளர் மற்றும் காவல்துறை தலைமை இயக்குநர் ஆகியோருக்கு ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இரண்டு வாரங்களுக்குள் இதுகுறித்த விரிவான அறிக்கையை சமர்ப்பிக்குமாறு அதில் கோரப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்களின் நெருங்கிய உறவினர்களுக்கு ஏதேனும் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளதா என்பது குறித்த தகவலும் அந்த அறிக்கையில் இடம்பெற வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
***
(Release Id: 2178894)
SS/SE/SH
(रिलीज़ आईडी: 2179094)
आगंतुक पटल : 17