புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கம் அமைச்சகம்
உத்தரப்பிரதேச முதலமைச்சர், தேசிய புள்ளியியல் ஆணையம் இடையே உயர்நிலை கலந்துரையாடல்
Posted On:
14 OCT 2025 9:27AM by PIB Chennai
உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், தேசிய புள்ளியியல் ஆணையத் (என்எஸ்சி) தலைவர் பேராசிரியர் ராஜீவ லஷ்மண் கரண்டிக்கார், என்எஸ்சி உறுப்பினர்கள் பேராசிரியர் ஏ கணேஷ்குமார், திரு அசித் குமார் சாது ஆகியோரிடையே உயர்நிலை கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்தின் செயலாளர் டாக்டர் சௌரப் கார்க் உடனிருந்தார். உத்தரப்பிரதேசத்தின் பொருளாதார மற்றும் புள்ளியியல் இயக்ககத்துடன் தேசிய புள்ளியியல் ஆணையத்தின் ஒருநாள் கலந்துரையாடல் நடைபெறவுள்ள நிலையில் இந்தக் கூட்டம் நடைபெற்றுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாறவிருக்கும் தொலைநோக்குப் பார்வைக்கு உதவியாக அதன் புள்ளியியல் அமைப்பு முறையை வலுப்படுத்துவது இந்த கலந்துரையாடலின் மையப்பொருளாக இருந்தது. தரவு தரத்தை மேம்படுத்துவதில், குறிப்பாக மாநிலத்தின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பீடு, நுகர்வோர் விலைக்குறியீடு, வேலைவாய்ப்பு குறியீடுகள், தொழில்துறை புள்ளி விவரங்கள் ஆகியவற்றில் மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் மற்றும் தேசிய புள்ளியியல் ஆணையத்தின் கூட்டு முயற்சிகளை முதலமைச்சர் பாராட்டினார். முதலமைச்சரின் தகவல் பலகை, ஒரு டிரில்லியன் பொருளாதார இயக்கம் போன்ற முன் முயற்சிகள் மூலம் தரவு அடிப்படையிலான திட்டமிடல், நிகழ்நேர கண்காணிப்பு ஆகியவற்றில் மாநில அரசின் உறுதிப்பாட்டையும் அவர் வலியுறுத்தினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2178728
***
SS/SMB/AG/SH
(Release ID: 2179065)
Visitor Counter : 7