பெண்கள் மற்றும் குழந்தை நலன் அமைச்சகம்
மணிப்பூர் மாநிலத்தில் பல்வேறு கருப்பொருள்களின் கீழ் 8-வது தேசிய ஊட்டச்சத்து மாதம் கொண்டாடப்பட்டது
प्रविष्टि तिथि:
08 OCT 2025 4:55PM by PIB Chennai
‘ஆண்களை மையப்படுத்துதல்’ என்ற கருப்பொருளின் கீழ், மணிப்பூர் மாநிலத்தின் சந்தேல் மாவட்டத்தில் உள்ள ஐசிடிஎஸ் சாக்பகாரோங்கில், ஆண் பராமரிப்பாளர்கள் ஊட்டச்சத்து முன்னோடிகளாக கௌரவிக்கப்பட்டனர்.
இம்பால் கிழக்கு-I-ல் உள்ள ஒருங்கிணைந்த குழந்தை மேம்பாட்டுத் திட்டம் மூலம், உடல் பருமன் சிக்கல் குறித்த விழிப்புணர்வு அமர்வு பள்ளி மாணவர்களுக்கு நடத்தப்பட்டது.
இம்பால் நகரில் உள்ள ஒருங்கிணைந்த குழந்தை மேம்பாட்டுத் திட்டம் மூலம், பச்சிளங்குழந்தை மற்றும் இளம் குழந்தை உணவு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, இணையுணவு ஊட்டுதல் குறித்த விழிப்புணர்வு அமர்வு நடத்தப்பட்டது.
இம்பால் கிழக்கு-II-ல் உள்ள ஒருங்கிணைந்த குழந்தை மேம்பாட்டுத் திட்டம் மூலம், 'உள்ளூர் உற்பத்திக்கு குரல் கொடுப்போம்' என்ற தொலைநோக்குப் பார்வையை ஊக்குவிக்கும் வகையில், உள்ளூரில் கிடைக்கும் சத்தான உணவுப் பொருட்கள் மற்றும் வீட்டில் செய்யப்படும் பொம்மைகளைப் பயன்படுத்துவது குறித்த விழிப்புணர்வு அமர்வு நடத்தப்பட்டது.
நாடு முழுவதும் 8-வது தேசிய ஊட்டச்சத்து மாதத்தையொட்டி ஆரோக்கியமான ஊட்டச்சத்து மற்றும் உணவுப் பழக்க வழக்கங்களைப் கடைப்பிடிப்பது தொடர்பான செய்தியைப் பரப்புவதற்கு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் ஒன்றிணைந்துள்ளன.
***
(Release ID: 2176350 )
SS/EA/SH
(रिलीज़ आईडी: 2178844)
आगंतुक पटल : 64